தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி

மாதிரிப்படம்

கர்ப்பிணி பெண்கள் அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள சிறப்பு முகாம்களுக்கு சென்றால் முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது.

    கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செல்ல அனுமதிக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. கோவின் தளத்தில் பதிவு செய்த பின்னர் அல்லது அருகில் உள்ள தடுப்பூசி முகாம்களுக்கு நேரில் சென்று பதிவு செய்த பின்னர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. மாநில அரசுகளுக்கு இதற்கான நெறிமுறைகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. .

    தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் , கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்ததின் பேரில் தமிழகத்தில் இன்று முதல் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவதாக கூறினார். தமிழகத்தில் மொத்தம் 7 லட்சத்து 38 ஆயிரத்து 583 கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கர்ப்பிணி பெண்கள் அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள சிறப்பு முகாம்களுக்கு சென்றால் முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

    தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள காரணத்தால் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தளர்வுகள் தொடர வேண்டும் என்றால் பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

     

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: