திருமணம் செய்ய கோரி காதலன் வீடு முன் அழுது புரண்ட கர்ப்பிணி பெண்

போலீசாரிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத விரக்தியால், காதலன் வீட்டின் முன், உறவினர்களுடன் தர்ணா போராட்டம் நடத்தினார்.

Web Desk
Updated: April 14, 2019, 10:45 AM IST
திருமணம் செய்ய கோரி காதலன் வீடு முன் அழுது புரண்ட கர்ப்பிணி பெண்
பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்
Web Desk
Updated: April 14, 2019, 10:45 AM IST
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, கர்ப்பிணி பெண், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு காதலன் வீட்டின் முன் அழுது புரண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஆம்பூரை அடுத்த கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் என்ற ஓட்டுனரை காதலித்து வந்துள்ளார். இரண்டரை ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், ஜானகிராமன் அப்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி உறவு கொண்டுள்ளார்.

இதனால் கர்ப்பமான அவர், தன்னை விரைவில் மணந்துகொள்ள வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். இதற்கு செவிசாய்க்காத ஜானகிராமன், தங்கள் குடும்பம் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளாமாட்டார்கள் என கூறி தட்டிக்கழித்துள்ளார்.

மனமுடைந்த அப்பெண், போலீசாரிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத விரக்தியால், காதலன் வீட்டின் முன், உறவினர்களுடன் தர்ணா போராட்டம் நடத்தினார். அப்போது அங்குவந்த காவலர்களின் காலை பிடித்து, தன்னை காதலருடன் சேர்த்து வைக்குமாறு அவர் மன்றாடிய காட்சி, அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதனைதொடர்ந்து காதலர் ஜானகிராமனை போலீசார் தேடி வருகின்றனர்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...