முகப்பு /செய்தி /தமிழ்நாடு / குட்டியை பெற்றெடுக்க முடியாமல் உயிரிழந்த கர்ப்பிணி காட்டு யானை... ஓசூரில் சோகம்

குட்டியை பெற்றெடுக்க முடியாமல் உயிரிழந்த கர்ப்பிணி காட்டு யானை... ஓசூரில் சோகம்

காட்டு யானை

காட்டு யானை

வனப்பகுதியில் ஓடை ஒன்றில் அந்த பெண் கர்ப்பிணி காட்டுயானை குட்டியை பெற்றெடுக்க முடியாமல் உயிரிழந்து கிடந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Hosur, India

ஓசூர் அருகே பெல்லட்டி வனப்பகுதி கோவைப்பள்ளம் பீட்டில் காட்டு யானைகள் அதிக அளவில் சுற்றித்திரிகிறது. இந்த காட்டுயானைகள் கூட்டத்தில் சுற்றிய நிறைமாத கர்ப்பிணியான 30 வயது மதிக்கத்தக்க பெண் காட்டுயானை ஒன்று கடந்த இரண்டு நாட்களாக குட்டியை ஈன்ற முடியாமல் தவித்து வந்துள்ளது.

இந்த நிலையில் வனப்பகுதியில் ஓடை ஒன்றில் அந்த பெண் கர்ப்பிணி காட்டுயானை குட்டியை பெற் றெடுக்க முடியாமல் உயிரிழந்து கிடந்துள்ளது. காட்டுயானையின் உடலை பார்த்த அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் இதுகுறித்து தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

Also Read : தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டுயானையின் உடலை மீட்டு வனத்துறை கால்நடை மருத்துவர்கள் மூலம் அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர்.பின்னர் தாய் காட்டுயானை உடலை அதே இடத்தில் விட்டு விட்டு வந்தனர்.

உயிரிழந்த தாய் யானையின் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட குட்டி யானையின் உடலை  கல்வி சம்பந்தமான பயன்பாட்டுக்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர். காட்டுயானை பிரசவிக்க முடியாமல் வயிற்றில் குட்டியுடன் உயிரிழந்த சம்பவம் வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: Elephant and calf, Elephant struggles, Hosur