சுக பிரசவத்திற்கு காத்திருந்து குழந்தையுடன் உயிரிழந்த நர்ஸ்

சுக பிரசவத்திற்கு காத்திருந்து குழந்தையுடன் உயிரிழந்த நர்ஸ்

கோப்புப்படம்

தனக்கும் சுகப்பிரசவமே ஆகும் எனக் கூறி, ஆங்கில மருத்துவ சிகிச்சைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  பெரம்பலூர் மாவட்டத்தில் ஆங்கில மருத்துவத்தின் மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி, சுக பிரசவத்திற்காக காத்திருந்த பிஎஸ்சி நர்சிங் பெண், குழந்தையுடன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  பூலம்பாடியைச் சேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவரான விஜயவர்மனுக்கும், பிஎஸ்சி நர்சிங் முடித்த அழகம்மாளுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அழகம்மாள் கருவுற்றதை தொடர்ந்து, கிராம செவிலியர் மூலம் மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது, டிசம்பர் 28ஆம் தேதி பிரசவம் நடைபெறும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

   

  மேலும் படிக்க... என்னை மேலும்.. மேலும்.. வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் - ரஜினி உருக்கம்

   

  ஆனால், அதன் பிறகு மருத்துவர்கள் பலமுறை வலியுறுத்தியும், அழகம்மாள் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்துள்ளார். மாறாக, தங்கள் குடும்பத்தில் அனைத்து பெண்களுக்கும் சுகப் பிரசவமே ஆனதால், தனக்கும் சுகப்பிரசவமே ஆகும் எனக் கூறி, ஆங்கில மருத்துவ சிகிச்சைக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

  சுகாதாரத்துறை தரப்பில் இருந்து பலமுறை அறிவுறுத்தியும் அவர்கள் சிகிச்சைக்கு செல்ல மறுத்துள்ளனர். இந்நிலையில், தாயும் சேயும் உயிரிழந்துள்ளனர். இதனால், அப்பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது.
  Published by:Suresh V
  First published: