சென்னை வில்லிவாக்கம் ரங்கதாஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் கௌசிபி. அவருக்கு வயது 26. இவரது கணவர், ரதி டெக்ஸ்டைல் என்ற துணை கடையில் கணவர் பணிப்புரிந்து வருவதாக கூறப்படுகிறது. 4 மாத கர்ப்பிணியான இவர் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் எடுத்துவிட்டு தனது கணவரிடம் காட்டிவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தபொழுது பின்னால் வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே பலியானார். அதனையடுத்து, விபத்து ஏற்படுத்திய காரில் பயணம் செய்த பெண் தப்பி சென்றுள்ளார். விபத்து ஏற்படுத்திய கார் வருமான வரித்துறை அதிகாரியுடையது எனக்கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் மற்றும் ராஜமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.