மது பாட்டில்களில் இடம் பெற்றிருக்கும் ’மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு’ வாசகம் மாற்றப்படுகிறது!

கோப்புப் படம்

அந்த விவாதத்தின் மதுபானக் கடைகளைக் குறைப்பது குறித்து அத்துறை அமைச்சசர் தங்கமணி விளக்கினார்.

 • Share this:
  அரசு மதுபானக் கடைகள் மற்றும் மதுபான பாட்டில்களில் இடம் பெற்றிருக்கும் மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்ற சொற்றொடர் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  சட்டப்பேரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்குதுறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் மதுபானக் கடைகளைக் குறைப்பது குறித்து அத்துறை அமைச்சசர் தங்கமணி விளக்கினார்.

  மேலும், அரசு மதுபானக் கடைகள் மற்றும் மதுபான பாட்டில்களில் இடம் பெற்றிருக்கும் எச்சரிக்கை வாசகமான ‘மது - நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்று சொற்றொடருக்குப் பதிலாக ‘மது அருந்துதல் உடல்நலத்துக்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர் - மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர் என்று சொற்றொடர் பயன்படுத்தப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வை துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also see:

  Published by:Karthick S
  First published: