வீட்டிற்குள் புதையல் வேட்டை... மாந்தரீக கும்பல் அட்டூழியம்

பெரம்பலூர் அருகே வீட்டில் புதையல் இருப்பதாக கூறி மாந்திரீகம் செய்து, 12 அடிக்குமேல் குழி தோண்டி, அதை மூட வேண்டுமானால், 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என பணம் பறித்த 3 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்,

 • Share this:
  பெரம்பலூர் அருகேயுள்ள விளாமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 39 வயதான பிரபு; ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தன் நண்பர் திருச்சி மாவட்டம் கோட்டாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரிடம் புலம்பியுள்ளார். அவர் தனக்குத் தெரிந்த ஜோசியம் மற்றும் மாந்திரீகம் பார்க்கும் நபரிடம் அழைத்துச் செல்வதாக நம்பிக்கை அளித்துள்ளார்.

  அதன்படி, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகேயுள்ள கொளக்காட்டுப்புத்தூர் கிராமத்தை சேர்ந்த 51 வயதான கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் அழைத்து சென்றுள்ளார். அவரும் பிரபுவின் வீட்டில் புதையல் இருப்பதாகவும் அதனை தாங்கள் எடுத்து தருவதாகவும் அதற்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் பேரம் பேசியுள்ளார்.

  Also Read : முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரெய்டில் சிக்க என்ன காரணம்?

  இதனைத்தொடர்ந்து முன்பணமாக 5 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு, கிருஷ்ணமூர்த்தி, பிரபாகரன், சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியைச் சேர்ந்த 36 வயதான வெள்ளியங்கிரி ஆகிய மூவரும், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பிரபுவின் வீட்டிற்கு சென்று அங்கு புதையல் இருப்பதாக நிச்சயப்படுத்தியுள்ளனர்.

  தொடர்ந்து கடந்த 20ம்தேதி பிரபுவின் வீட்டிற்கு மூவரும் சென்று பூஜைகள் செய்துவிட்டு 3 அடி அகலம் 6 அடி நீளத்திற்கு பள்ளம் தோண்ட ஆரம்பித்துள்ளனர். 12 அடி வரை பள்ளம் தோண்டி ஒன்றும் கிடைக்காததால் அத்துடன் நிறுத்தி விடுங்கள் என்று பிரபு கூறியுள்ளார்.

  Also Read : ரூ.600 கோடி மெகா மோசடி... சிபிஐ பிடியில் சிக்குவார்களா ஹெலிகாப்டர் பிரதர்ஸ்?

  அப்படியானால், தாங்கள் கேட்ட 50 ஆயிரம் ரூபாயைத் தரவேண்டும்; இல்லையெனில் தெய்வ குத்தம் ஆகிவிடும்; பிரபுவின் வாயை மந்திரத்தால் கட்டிப் போட்டு விடுவோம் என மூவரும் மிரட்டியுள்ளனர். அதிர்ச்சியடைந்த பிரபு, பணம் ஏற்பாடு செய்வதாகக் கூறி விட்டு, பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

  இதனைத்தொடர்ந்து பிரவு வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு பூஜையில் ஈடுபட்டிருந்த பிரபாகரன், கிருஷ்ணமூர்த்தி, வெள்ளியங்கிரி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர் மாந்திரீகம் என்ற பெயரில் 3 நபர்கள் பணம் பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: