Home /News /tamil-nadu /

சிறையில் சொகுசு வசதி... லஞ்சம் : சசிகலாவுக்கு முன்ஜாமீன்

சிறையில் சொகுசு வசதி... லஞ்சம் : சசிகலாவுக்கு முன்ஜாமீன்

சசிகலா

சசிகலா

Pre-bail for Sasikala : சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரான நிலையில், நீதிபதி முன்ஜாமீன் வழங்கினார். மேலும் ஏப்ரல் 16ஆம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

    சொத்து வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கடந்த 2017 பிப்ரவரி 15 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு சசிகலாவுக்கு பெண்கள் சிறையில் தனி அறை ஒதுக்கப்பட்டது. அவர், சிறையில் இருந்தபோது பல்வேறு சலுகைகள் செய்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    சிறையிலிருந்து சசிகலா சாதாரண உடையில் அடிக்கடி வெளியில் சென்று வந்ததாகவும் தகவல்கள் பரவின. மேலும் அவர் சிறையில் கைதிகளுக்கான ஆடை அணியாமல் வழக்கமான சேலையை அணிந்து சொகுசாக வாழ்ந்தததாகவும் சொல்லப்பட்டது. இது தொடர்பாக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா சிறையில் அதிரடி சோதனை நடத்தி,  சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது சசிகலா சாதாரண உடையில் ஷாப்பிங் சென்ற சி.சி.டி.வி. காட்சிகள் பதிவாகி இருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 4 ஆண்டுகள் தண்டனை காலம் முடிந்து சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், சிறையில் இருந்தபோது சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக சசிகலா, இளவரசி ஆகியோர் மீது புகார்கள் எழுந்தன. சசிகலா சிறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா 2017ஆம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்தார். அத்துடன், சசிகலா சாதாரண உடையில் வெளியில் சென்று வந்த வீடியோ காட்சிகளையும் வெளியிட்டார்.

    இதனைத் தொடர்ந்து, ஊழல் தடுப்பு போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் காலதாமதம் செய்ததால் சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா கடந்த ஆண்டு ஜூலை மாதம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் சசிகலா, இளவரசி, சிறைத்துறை அதிகாரிகள் கிருஷ்ணகுமார், சோமசேகர், டாக்டர் அனிதா, சுரேஷ், கஜராஜ் மாகனூர், ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    Read More : டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு... இனி இதை மறந்துவிடாதீர்

    இந்நிலையில், கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி லட்சுமி நாராயண் பட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சிறை அதிகாரிகள் உள்பட 7 பேரும் அடுத்த விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பும்படியும் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். அத்துடன் இந்த வழக்கு விசாரணையை இன்றைக்கு (மார்ச் 11) ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார்.

    Must Read : மக்கள்தான் எஜமானர்கள்... ஒரு ரூபாய் கூட சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

    இந்த நிலையில் 2 கோடி ரூபாய் லஞ்ச வழக்கு தொடர்பாக பெங்களூரு 24ஆவது மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமி நாராயண் பட் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது சசிகலா, இளவரசி ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். அப்போது நீதிபதி, சசிகலாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அத்துடன் ஏப்ரல் 16ஆம் தேதி சசிகலா மற்றும் இளவரசி மீண்டும் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Bail, Sasikala

    அடுத்த செய்தி