மக்களுக்கு சேவையாற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது மனவேதனையளிப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை பூங்கா முருகன் கோவிலில் தங்கவைக்கப்பட்டுள்ள ஆதரவற்றவர்களையும் முதியவர்களையும் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பார்வையிட்டார். அவர்களுக்கு காலை உணவு பரிமாறிமாறியதோடு, அவர்களின் தேவைகளையும் அவர் கேட்டறிந்தார். அவருடன் மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உள்ளிட்டோர் இருந்தனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ”வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களைக் காப்பாற்ற மகத்தான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. மாநிலப் பேரிடர் ஆணையத்தின் தலைவராக முதலமைச்சர் 13 கூட்டங்களுக்கும் மேலாக நடத்தியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச உணவுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்களுக்காக சேவையாற்றும் ஊடக நண்பர்களுக்கும் இந்தத் தொற்று வந்துவிட்டது என்பதை அறிந்து மிகுந்த வேதனை அடைகின்றேன். அனைவரும் பூரண உடல்நலம் பெற்று இல்லம் திரும்ப வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறேன். தற்சமயம் பணியில் இருக்கும் ஊடக நண்பர்களும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
மருத்துவர்களின் அறிவுரைகளை ஏற்றுக்கொண்டு விழிப்புணர்வோடு நடந்துகொண்டால் இந்த பாதிப்பில் இருந்து அனைவரும் மீண்டு வர முடியும். மக்கள் தாமாக முன்வந்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்” என்றார்.
மே 3ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சூழ்நிலைக்கு ஏற்றவாறு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மக்களின் பாதுகாப்பு நலன் கருதி எடுப்பார் என்று தெரிவித்தார்.
மேலும், வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் சட்டசபையில் பல கோடி நிதி ஒதுக்கியுள்ளார். மற்ற மாநிலங்களை விட தமிழக மக்களுக்கு நிதி பெற்றுத் தருவதில் முதலமைச்சர் முன்னோடியாக உள்ளார். இது மக்களுக்கும் நன்றாகவே தெரியும் எனத் தெரிவித்தார்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madurai, Minister udhayakumar