முகப்பு /செய்தி /தமிழ்நாடு / விவசாயிகளே உங்க பயிர்களுக்கு இன்சூரன்ஸ் செய்து விட்டீர்களா? இதோ எளிமையான வழி...

விவசாயிகளே உங்க பயிர்களுக்கு இன்சூரன்ஸ் செய்து விட்டீர்களா? இதோ எளிமையான வழி...

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சம்பா, தாளடி, பிசானப் பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே தங்களது நெற்பயிரை காப்பீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  • 1-MIN READ
  • Last Updated :

விவசாயிகள் இயற்கை பேரழிவுகளிலிருந்து தங்களின் பயிர்களை பாதுகாக்க பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்று விவசாயத் துறை அறிவுறுத்துகிறது. மத்திய அரசு அதற்கான பணிகளை பல்வேறு மாநிலங்களில் தொடங்கியுள்ளது. கிசான் கிரெடிட் கார்டு (Kisan credit Card) மூலம் பயிர் கடன்களை எடுத்த விவசாயிகள், அவர்களின் பயிர் தானாகவே காப்பீட்டின் கீழ் வருகிறது. மற்ற விவசாயிகள் தங்கள் விருப்பப்படி பயிர் காப்பீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பயிர் கடன் இல்லாத விவசாயிகள் தங்களின் பயிர்களுக்கான காப்பீட்டை தனியாகவோ அல்லது பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் (Pradhan Mantri Fasal Bima Yojana) இணைந்தும் பெற்றுக்கொள்ளலாம், இதனை விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள சேவை மையங்களை அணுகி இணைந்துக்கொள்ளலாம்.

இதுதொடர்பாக தமிழக வேளாண் உற்பத்தி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ எதிர்பாராது நிகழும் இயற்கைப் பேரிடர்களினால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாத்து அதன்மூலம் பண்ணை வருவாயை நிலைப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் 2021- 2022 ஆம் ஆண்டில் செயல்படுத்துவதற்கான அரசாணையினையும் நிதியினையும் வழங்கி உள்ளது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் சம்பா/ தாளடி/ பிசான பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரை முழுவீச்சில் காப்பீடு செய்து வருகின்றனர். இதுவரை 5.65 லட்சம் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டு 6.91 லட்சம் ஏக்கர் பயிர் பரப்பு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

சம்பா, தாளடி, பிசான நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் எப்போது?

தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூ, திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சம்பா பருவத்தில் நெற்பயிரை காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15, 2021 கடைசி நாளாகும்.

கன்னியாகுமரி, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சம்பா பருவத்தில் நெற்பியிரை காப்பீடு செய்வதற்கு டிசம்பர் 15, 2021 கடைசி நாளாகும்.

காப்பீடுகளை எங்கே பதிவு செய்வது?

தற்போது தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பெய்துவரும் வடகிழக்குப் பருவ மழையினால், நெற்பயில் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே இதுவரை இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யாத விவசாயிகள் அனைவரும்

  • வங்கிகள்
  • தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள்
  • பொது சேவை மையங்கள் மூலமாக பதிவு செய்துக்கொள்ளலாம்

காப்பீடு செய்வதற்கு என்னென்ன ஆவணங்கள் கொண்டு செல்ல வேண்டும்?

  •  விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் போது, முன்மொழிவு விண்ணப்பத்துடன்,
  • பதிவு விண்ணப்பம்,
  • கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்/ விதைப்பு அறிக்கை
  • வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank pass book) முதல் பக்க நகல் (xerox)
  • ஆதார் அட்டையின் (Aadhar Card) நகல் ( xerox)
  • மேலும் பயிர் காப்பீட்டுத் தொகையில் 1.5 சதவீதத் தொகையினை விவசாயிகளின் பங்களிப்பாக செலுத்த வேண்டும்.

இதற்கான ரசீதையும் பொதுச் சேவை மையங்கள் / தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம்.

எனவே சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் சம்பா, தாளடி, பிசானப் பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே தங்களது நெற்பயிரை காப்பீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 கூடுதல் விபரங்களுக்கு

  • வட்டார வேளாணமை உதவி இயக்குநரை
  • வேளாண்மை அலுவலர்
  • உதவி வேளாண்மை அலுவலர்
  • அல்லது வங்கிகளையோ அணுகலாம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai Rain, Delta district crops, Heavy Rainfall, Insurance, PMModi, Samba crops