பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் மேற்கூரை அமைக்க கூடுதலாக ரூ 70,000 வழங்கப்படும் - முதலமைச்சர்

முதலமைச்சர்

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் மேற்கூரை அமைப்பதற்கு கூடுதலாக 70,000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

 • Share this:
  பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் வீடு கட்டுவதற்கு மத்திய-மாநில அரசுகள் பங்களிப்பில் 1 , 20 ,000 ரூபாய் அலகுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் சேர்த்து, கான்க்ரீட் மேற்கூரை அமைப்பதற்கு கூடுதலாக 50 ,000 ரூபாயை ஏற்கனவே தமிழக அரசு வழங்கி வருகிறது.

  கொரோனா பாதிப்பு மற்றும் கட்டுமான பொருள்களின் விலையேற்றம் காரணமாக மேலும் 70,000  ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் ஒரு வீட்டிற்கான அலகுத்தொகை 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், 100 நாள் வேலை திட்டம் மற்றும் தனிநபர் இல்லக் கழிப்பறை தொகையுடன் சேர்த்து மொத்தம் 2 லட்சத்து 75 ஆயிரத்து 40 ரூபாய் வழங்கப்படும்.

  இதற்காக 1,805 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், 2,50,000 பயனாளிகள் பயன்பெறுவர்.

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   
  Published by:Sankaravadivoo G
  First published: