ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டம்.. பயனாளிகளுக்கு நிலம் ஒதுக்காத தமிழக அரசு..? எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு

பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டம்.. பயனாளிகளுக்கு நிலம் ஒதுக்காத தமிழக அரசு..? எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு

தலைமை செயலகம்

தலைமை செயலகம்

இதுவரை 2,75,000 ஆயிரம் பேருக்கு பல்வேறு மாநிலங்களும் நிலம் ஒதுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தின்கீழ், நிலமில்லா மக்களுக்கு வீடுகட்டுவதற்கு நிலம் வழங்குவதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பின்தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. 

பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தின்கீழ், ஏழைகளுக்கு வீடு கட்டுவதற்கான நிதியுதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது.இதில், நிலமில்லாத மக்களுக்கு நிலம் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஒட்டுமொத்தமாக 5 ,24,000 ஆயிரம் பயனாளிகளில் இதுவரை 2,75,000 பேருக்கு பல்வேறு மாநிலங்களும் நிலம் ஒதுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இன்னும் நிலம் வழங்கப்படவில்லை.

இதற்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் 96,806 பேருக்கு நிலம் வழங்க வேண்டியுள்ளது. மேலும், அசாம், ஒடிசா, பீகார் மாநிலங்களிலும் நிலம் ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

 

இதனைத் தொடர்ந்து, மாநில அரசுகளுக்கு மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், பயனாளிகளுக்கு வரும் 15-ம் தேதிக்குள் நிலத்தை ஒதுக்காவிட்டால், இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு, சிறப்பாக செயல்படும் மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Pradhan mantri Jan Arogya Yojana, Tamil News