தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 மக்களவை மற்றும் 22 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை குறித்த நடைமுறை விளக்கங்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
அதுகுறித்த நடைமுறை விளக்கங்களை குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை காலை 8 மணியளவில் தபால் வாக்குகளும், மின்னணு பரிமாற்றத்தின் மூலம் செலுத்தப்பட்ட தபால் வாக்குகளும் எண்ணும் பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியும், 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய நிலையில், ஏதேனும் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்குரிய வாக்கு எண்ணும் கூடத்தில், தபால் வாக்குகள் எண்ணப்படும் என்றும், இது முடிந்த 30 நிமிடங்களுக்கும் பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும் என்றும், கூறப்பட்டுள்ளது.
தபால் வாக்குகள் எண்ணப்படும் ஒரு சட்டமன்ற தொகுதியைத் தவிர, மீதமுள்ள 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கூடங்களில் வாக்கு எண்ணும் பணி, காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் நடைபெற்ற 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கிய நடைபெற்ற பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செலுத்தப்பட்ட வாக்குகள் எண்ணிக்கை, காலை 8.30 மணிக்குத் தொடங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலுள்ள வாக்குகளை எண்ணும் பணி, முன்னரே திட்டமிட்டபடி, சுழற்சி முறையில் நடைபெறும் என்றும் கட்டுப்பாட்டுக் கருவியிலுள்ள மின்கலம் (பேட்டரி) இயங்காவிட்டால், மாற்று மின்கலம் பொருத்தப்பட்டு எண்ணிக்கைத் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டுக் கருவியிலிருந்து முடிவுகளைப் பெற முடியாத நிலையில், அக்கருவி தனியாக வைக்கப்பட்டு, அக்கருவிக்கான ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும் என்றும் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும், ஒப்புகைச்சீட்டு எண்ணுவதற்கான 5 வாக்குச்சாவடிகளை தேர்ந்தெடுப்பது குலுக்கல் முறையில் நடைபெறும் என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also see... கடந்த காலத் தேர்தலில் கணித்ததும், நடந்ததும்! கருத்துக் கணிப்புகள்!
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.