வேளாண் சட்டத்தால் இந்தியாவில் மறு சுதந்திர போராட்டம் நடக்கும் - பி.ஆர். பாண்டியன்

வேளாண் சட்டத்தால் இந்தியாவில் மறு சுதந்திர போராட்டம் நடக்கும் - பி.ஆர். பாண்டியன்

பி.ஆர். பாண்டியன்

மத்திய அரசு வேளாண் சட்டங்களை விவசாயிகளுக்கு ஆதரவாக நிறைவேற்றாவிட்டால் மறு சுதந்திர போராட்டம் நடக்கும் என பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டத்தை எதிர்த்தும், அச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு அடுத்தடுத்து நடத்திய பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் அனைவரும் தீவிரமாக போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.

வேளாண் சட்டங்களை நீக்க வாய்ப்பில்லை என்றும் அதில் திருத்தங்கள் வேண்டுமானால் செய்ய தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் இதுவரை நடந்த 5 சுற்று பேச்சுவார்த்தைகளிலும் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை (புதன்கிழமை) நடைபெற இருக்கிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்தை டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்தனர். விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. தமிழகத்தில் தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர்.

அதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று, வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, மக்கள் நீதி மய்யத்தின் கட்சியினர், ஆம்ஆத்மி கட்சியினர், தமிழ் மையத்தினர், பூவுலகின் நண்பர்கள், அமைப்புச் சாரா தொழிலாளர் சங்கதினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர்
ஆதரவு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மத்திய அரசே, மத்திய அரசே விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை அனுமதிக்காதே, மோசடியாக அனுமதித்த வேளாண் சட்டங்களை திருப்ப பெறு, திருப்ப பெறு என்று கோஷங்களை எழுப்பியிருக்கிறார்கள்.

இதில், பங்கேற்ற தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பேசியதாவது, இந்திய மக்கள் உணவுக்கு கையேந்தும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. பாராளுமன்றத்தில் ஜனநாயகத்தின் அடிப்படையில்
இந்த வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்று அவர் பேசினார்.

Also read... குப்பைகளை அகற்றுவதில் விதிமீறல்கள் இருந்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை- தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், ‘வேளாண் சட்டத்தை எதிர்த்து 13 வது நாட்களாக டெல்லியின் எல்லையில் விவசாயிகள் போராடி கொண்டு இருக்கிறார்கள். போராடும் விவசாயிகளை மிருகங்களை காப்பதுபோல் பள்ளம் தோண்டி, இரும்புகள் கொண்டு அடங்குகிறது. விவசாயிகள், மாநில அரசுகளுடன் கலந்து பேசி விவசாயிகளுக்கு ஆதரவாக சட்டம் இயற்ற வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு கொண்டு இருக்கிறார்.
இந்த சட்டத்திற்கு ஆதரவு அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாநில விவசாயிகள், அரசியல் கட்சியினர், சட்டவல்லுநர்களுடன் இணைந்து பேசினாரா? மத்திய அரசு வேளாண் சட்டங்களை விவசாயிகளுக்கு ஆதரவாக நிறைவேற்றாவிட்டால் மறு சுதந்திர போராட்டம் நடக்கும் என்றும் தெரிவிதார். மேலும், சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த தீர்ப்பு ஆளுங்கட்சிக்கு நெத்தியடி என்றும் அவர் கூறினார்.
Published by:Vinothini Aandisamy
First published: