முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Cyclone Mandous: புயலால் ஏற்பட்ட மின்தடை எப்போது சீராகும்..?- மின்துறை அமைச்சர் கொடுத்த அப்டேட்!

Cyclone Mandous: புயலால் ஏற்பட்ட மின்தடை எப்போது சீராகும்..?- மின்துறை அமைச்சர் கொடுத்த அப்டேட்!

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

Cyclone Mandous : சென்னையில் புயலின்போது வீசிய பலத்தக் காற்றால் பல இடங்களில் மின்கம்பங்களும் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாண்டஸ் புயல் காரணமாக, மின்சார விநியோகம் நிறுத்தப்பட்ட இடங்களில், பிற்பகலுக்குள் மின்சார விநியோகம் வழங்குவதற்கு போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்து வருவதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் தீவிர புயலிலிருந்து புயலாக வலுவிழந்த நிலையில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் புயல் கரையைக் கடந்தது.  இதையடுத்து, மாமல்லபுரத்தில் நேற்று மாலை 6 மணிக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாமல்லப்புரம் மட்டுமல்லாமல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வீசிய பலத்த காற்று மற்றும் கன மழை காரணமகா பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதையும் படிங்க: மாண்டஸ் புயல்: 25 குழுக்கள்.. 1.5 லட்சம் மின் கம்பங்கள்.. தயார் நிலையில் மின்வாரியம்!

இதுகுறித்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவிக்கையில், மாண்டஸ் புயல் காரணமாக சில இடங்களில் மின்சாரம் துண்டிப்பு 10 துணை மின்நிலையங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது களத்தை ஆய்ந்து மின்சேதங்களை சரிசெய்யும் பணிகள் நடைபெற்றுவருவதாகவும் இது தொடர்பாக நள்ளிரவு முதல் - காலை 7 வரை மின்னகத்திற்கு 16,000 அழைப்புகள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க :  ‘மாண்டஸ்’... புயலுக்கு இந்த பெயர் வைக்க காரணம் தெரியுமா?

இருப்பினும் மாண்டஸ் புயல் காரணமாக, மின்சார விநியோகம் நிறுத்தப்பட்ட இடங்களில், பிற்பகலுக்குள் மின்சார விநியோகம் வழங்குவதற்கு போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Cyclone Mandous, EB workers, Power cut