இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கும், மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் நிலவி வருகிறது. ஆளுநரின் அதிகாரத்திற்கு கடிவாளம் போட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், பல்கலைக்கழக வேந்தருக்கான ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மசோதா ஒன்றை மகாராஷ்டிரா அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா மூலம் மாநில அரசு பரிந்துரைக்கும் பெயர்களில் ஒருவரை மட்டும் பல்கலைக்கழக துணைவேந்தராக ஆளுநர் நியமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இனி ஆளுநரின் விருப்பத்திற்கு ஏற்ப யாரையும் துணைவேந்தராக நியமிக்க முடியாது என்று மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Also read: இந்தியாவின் ரஃபேலுக்கு பதிலடி கொடுக்க சீனாவிடமிருந்து J-10C ரக போர் விமானங்கள் வாங்கும் பாகிஸ்தான்!
மகாராஷ்டிராவில் ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் விதமாக மசோதா நிறைவேற்றப்பட்டதை போன்று தமிழகத்திலும் நிறைவேற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியும், திமுக எம்.பியுமான ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். கல்வி, மாநில அரசின் பட்டியலில் உள்ளதால், தமிழகத்தில் இருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு கல்வியாளர் ஒருவரை வேந்தராக நியமிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் சாசனப்படி ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அதை குறைப்பதற்கு மாநில அரசு நிறைவேற்றும் தீர்மானம் சட்டரீதியாக செல்லுமா என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்யும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Also read: 2021ல் விலையேற்றம் அடைந்தவை.. தக்காளி முதல் சிலிண்டர் வரை.
முன்னதாக மேற்குவங்கத்தில் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தர் என்ற முறையில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதாகவும், பல்கலைக்கழங்களுக்கு முதலமைச்சரை வேந்தராக நியமிக்க சட்டப்பூர்வமாக வழிமுறைகள் உள்ளதா என பரிசீலித்து வருவதாகவும் அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ப்ரத்ய பாசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.