• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியின் அதிகாரங்கள் என்னென்ன? எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியின் அதிகாரங்கள் என்னென்ன? எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

சைலேந்திர பாபு

சைலேந்திர பாபு

தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவின் டி.ஜி.பியாக சைலேந்திர பாபு இன்று பொறுப்பேற்றுள்ளார்.

  • Share this:
    தமிழ் நாட்டின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியின் அதிகாரங்கள் என்னென்ன? அவரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

    காவல்துறையைப் பொறுத்தவரை சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி பதவி தான் அதிகார மையமாக திகழ்கிறது. சிபிசிஐடி, லஞ்ச ஒழிப்புதுறை, உளவுத்துறை , தீயணைப்புத்துறை, ரயில்வே என பல துறைகளில் டிஐபிகள் இருந்தாலும், சட்ட-ஒழுங்கு டிஜிபியாக இருப்பவர் தான், இவர்கள் அனைவருக்கும் தலைவராக செயல்படுவார். காவல்துறையில் எந்த பணிகள் நடந்தாலும் சட்ட-ஒழுங்கு டிஜிபி அனுமதி பெற்று தான் நடக்கும்.

    ஐபிஎஸ் அதிகாரிகள் பணி ஓய்வு பெற சில மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் இருக்கும்போது தான் காவல்துறையின் உச்சபட்ச அதிகாரம் மிக்க பதவியான சட்டம்-ஒழுங்கு டிஜிபி அந்தஸ்து கிடைக்கும்.

    மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கிற்கு, இவரே பொறுப்பு என்பதால், சிறந்த அனுபவம் வாய்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி, சீனியாரிட்டி அடிப்படையிலேயே இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார்.

    பேரிடர் காலங்கள் மற்றும் முக்கியமான துறை சார்ந்த முடிவுகள் எடுக்கும் ஆலோசனை கூட்டத்தை முதல்வர் நடத்தினால், அதில் சட்ட-ஒழுங்கு டிஜிபி கட்டாயம் பங்கேற்பார்.

    மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு, உளவுத்துறை தகவல்கள் தொடர்பாக இவரிடம் தான் முதலமைச்சர் தினமும் ஆலோசனை நடத்துவார்.

    காவல்துறை மேம்பாடு தொடர்பான அனைத்து பணிகளும், அதற்கான நிதி ஒதுக்கீடும், சட்டம்-ஒழுங்கு டிஜிபி ஒப்புதலுடன் தான் மேற்கொள்ளப்படும்.

    இவ்வளவு அதிகாரம் மிக்க சட்டம்-ஒழுங்கு டிஜிபி பதவிக்கு பொருத்தமான நபரை தேர்வு செய்ய உச்ச நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது.

    அதன்படி, சட்டம்-ஒழுங்கு டிஜிபி ஆக நியமிக்கப்படுபவர் தகுதி வாய்ந்த, மூத்த ஐபிஎஸ் அதிகாரியாக இருக்க வேண்டும்.

    மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் பட்டியலை மத்திய தேர்வாணையத்திற்கு மாநில அரசு அனுப்பி வைக்க வேண்டும்.

    அவர்களில் தகுதி வாய்ந்த அதிகாரிகளை, சீனியாரிட்டி அடிப்படையில் பட்டியலிட்டு மாநில அரசுக்கு மத்திய தேர்வாணையம் வழங்கும்.

    அந்தப் பட்டியலில் முதல் 3 இடங்களில் இருக்கும் சீனியர் அதிகாரிகளில் ஒருவரை மாநில அரசு சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக நியமித்துக் கொள்ளலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஓய்வுபெறுவதற்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் இருக்கும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை மட்டுமே சீனியாரிட்டி அடிப்படையில் சட்டம்-ஒழுங்கு டிஜிபி ஆக நியமிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: