ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Headlines Today : தொடரும் மின்வெட்டு... அதிகரிக்கும் கொரோனா... இன்றைய தலைப்புச் செய்திகள் (ஏப்ரல் 23-2022)

Headlines Today : தொடரும் மின்வெட்டு... அதிகரிக்கும் கொரோனா... இன்றைய தலைப்புச் செய்திகள் (ஏப்ரல் 23-2022)

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Headlines Today : தமிழகத்தில் பல இடங்களில் மின்வெட்டு தொடர்வதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வரும் நிலையில், மின்தேவையை சமாளிக்க 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வாங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் நேற்றும் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

  தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் மின்தேவையை சமாளிக்க 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வாங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

  தமிழ் நாடு அரசின் தவறான முடிவுகள் தான், மின்வெட்டிற்கு முழு காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

  தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை 57 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

  சென்னை தாம்பரத்தில் உள்ள பள்ளிக்கு பெற்றோர் ஹிஜாப் அணிந்து வர தடை. இஸ்லாமிய அமைப்பினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

  சென்னையில் விசாரணைக் கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தில், சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

  வட மாநிலங்களில் அஞ்சல் துறையில் சேர தமிழகத்தில் படித்தது போன்று மேலும் 500 பேர் போலி சான்றிதழ்களை கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

  கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, சசிகலாவிடம் இரண்டாவது நாளாக 4 மணி நேரம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

  மரக்காணம் கலவரம் தொடர்பான வழக்கில் 22 பேரையும் விடுதலை செய்து திண்டிவனம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 2,500ஐ நெருங்கியுள்ளது.

  பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரதமர் நரேந்திர மோடி இடையேயான சந்திப்பில் கல்வி, பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

  ஆப்கானிஸ்தானில் மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

  கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேல் மழை பெய்ததால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

  இலங்கையில் 6-வது முறையாக தொடர்ந்து பணவீக்க விகிதம் உச்சத்தை எட்டியுள்ளது.

  Must Read : வாழ்க்கை என்பது பள்ளிக்கூடம், அதில் அனைவரும் மாணவர்கள் தான்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட சூரிய கிரகணத்தை நாசாவின் 'பெர்செவரன்ஸ் ரோவர்' விண்கலம் படம் பிடித்துள்ளது.

  நயன்தாரா, சமந்தா என இரண்டு கதாநாயகிகளுடன் விஜய் சேதுபதி நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

  ஐபிஎல் லீக் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது.

  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் களைகட்டவுள்ளன. மும்பை பாட்டில் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு கொல்கத்தா அணியும், குஜராத் அணியும் களம் காண்கின்றன.

  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Today news, Top News