கரூர் மாவட்டத்தில் 2வது நாளாக தொடர்ந்து இன்று அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்ததால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்றிரவு 8 மணியிலிருந்து மின்வெட்டு நிலவி வருகிறது. பெரும்பாலான இடங்களில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு ஏற்பட்டதால் பொது மக்கள் கடும் அவதியடைந்தனர். இதைத்தொடர்ந்து, மத்திய மின் கட்டமைப்பில் அல்லது தொகுப்பில் ஏற்பட்ட மின்னழுத்த வேறுபாடே சில இடங்களில் ஏற்பட்ட மின்தடைக்கு காரணம் என மின்சார வாரியம் விளக்கமளித்தது.
தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த விளக்கத்தில், மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனால் நகர்பபுறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். எனினும், அவர் கூறியபடி பல இடங்களில் மின்சாரம் மீண்டும் வழங்கப்படாததால் பொது மக்கள் கடும் அவதியடைந்தனர்.
பல இடங்களில் இரவு பத்தரை மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு நள்ளிரவு ஒரு மணி நேரத்தைக் கடந்தும் மின்சாரம் வரவில்லை. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகினர்.சிறு குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் குழந்தைகளை தூங்க வைக்க முடியாமல் சிரமப்பட்டனர்.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டதால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
கரூர் மாவட்டத்தில் மாநகராட்சியை பகுதியை தவிர மற்ற கிராமப்புறங்களில் அய்யர்மலை, மாயனூர், வல்லம் மின் நிலையத்தில் இருந்து வரும் பகுதிகளான சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இரண்டாவது நாளாக மின்வெட்டு ஏற்பட்டது.
கிருஷ்ணராயபுரம், மாயனூர், லாலாபேட்டை, பிள்ளபாளையம், அய்யர்மலை, மத்திப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரம் மின்வெட்டு என்ற நிலை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Power cut, Senthil Balaji