Home /News /tamil-nadu /

மின்வாரிய ஊழியரின் பைக் போலீசால் பறிமுதல் - பதிலடியாக நடந்த ஷாக் சம்பவம் என்ன தெரியுமா?

மின்வாரிய ஊழியரின் பைக் போலீசால் பறிமுதல் - பதிலடியாக நடந்த ஷாக் சம்பவம் என்ன தெரியுமா?

கோப்புப் படம்

கோப்புப் படம்

மின் வாரிய ஊழியரின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததால், காவல் நிலையத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த மின்சார வாரிய ஊழியர் சைமன் என்பவரின் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. மேலும், 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்த காரணத்தால், வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து உதவி மின் பொறியாளர் கோபாலசாமியிடம் சைமன் புகார் தெரிவித்தார். கோபாலசாமியின் உத்தரவிற்கிணங்க கூமாப்பட்டி காவல் நிலையத்திற்கு வரும் மின்சார வயரை, மின் வாரிய ஊழியர்கள் துண்டித்ததாக கூறப்படுகிறது.



    இதையடுத்து, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகே காவல் நிலையத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இதுகுறித்து காவல் நிலைய ஆய்வாளர் அளித்த புகாரின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார்.
    Published by:Sankar
    First published:

    Tags: Sivakasi

    அடுத்த செய்தி