ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மின்தடை, மதுக்கடை திறப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம்

மின்தடை, மதுக்கடை திறப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம்

மின்தடை - டாஸ்மாக்

மின்தடை - டாஸ்மாக்

தமிழகத்தில் தற்போது போதுமான மின் உற்பத்தி உள்ளது. பராமரிப்பு பணிகள் 9 மாதமாக நடைபெறததால் தான் மின் தடை உள்ளது. மின்வெட்டு இல்லை...

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் பராமரிப்பு பணிகளால் மின்தடை இருப்பதாகவும், மின் வெட்டு இல்லை என்றும் தமிழக சட்டப்பேரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.

  சட்டமன்றத்தில் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் கொள்முதல் செய்து மின்வெட்டை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

  இதற்கு பதில் அளித்து பேசிய மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த திமுக ஆட்சியில் மாநிலத்திலே சுமார் 7 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை கலைஞர் மேற்கொண்டார். அதுவும் கடந்த அதிமுக ஆட்சியில் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி அளவிற்கு குறைந்ததது. அதோடு தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனிடையே எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், மொத்த உற்பத்தியை அதிகரிப்பது, நிர்வகிக்கும் திறன், நுகர்வோர் தேவை எப்படி உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

  அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக ஆட்சியில் மின் தடையை போக்க குறுகிய கால ஒப்பந்தங்கள் போடப்பட்டு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில் நீண்ட கால ஒப்பந்தங்கள் போடப்பட்டதோடு, ஒரு யூனிட் 9 ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். இப்படி குறைபாடுவுள்ள நிர்வாக திறன் இருந்தது.

  எனவேதான் முதலமைச்சர் ஆளுநர் உரையில் மின்சார துறையில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் தற்போது போதுமான மின் உற்பத்தி உள்ளது. பராமரிப்பு பணிகள் 9 மாதமாக நடைபெறததால் தான் மின் தடை உள்ளது. மின்வெட்டு இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

  Read More : ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? பாஜக நயினார் நாகேந்திரன் கேள்விக்கு மு.க.ஸ்டாலின் விளக்கம்

  முன்னதாக, மதுக்கடை திறப்பு குறித்து பேரவையில் நடந்த விவாதத்தின்போது, கடந்த ஆட்சியில் குறைந்த அளவில் 580 பேர் மட்டுமே கொரோனா பாதிக்கப்பட்ட போது, மே 7 ம் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டபோது எதிர்கட்சி தலைவராக இருந்த திமுக தலைவர் மூடக்கோரி போராட்டம் நடத்தினார். தமிழகம் முழுவதும் கடைகளை மூடவேண்டும் என்றார். ஆனால் தற்போது 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டபோது மதுக்கடைகள் திறந்தது ஏன் என்று எதிர்கட்சி தலைவர் கேள்வி எழுப்பினார்.

  Must Read : கொரோனாவால் இறந்தவர்களுக்கு தனி சான்றிதழ் - மா.சுப்பிரமணியன்

  இதற்கு பதில் அளித்து பேசிய மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கொரோனா 4 சதவீதம் இருந்து போது மதுக்கடைகளை கடந்த அரசு திறந்தது. அதோடு உயர்நிதிமன்றம் கடையை திறக்ககூடாது என்று உத்தரவு பிறபித்த நிலையில், உச்சநீதிமன்றம் சென்று மதுக்கடைகளை கடந்த அரசு திறந்தது. மேலும் கடந்த ஆண்டு சில நாட்களிலே கொரோனா பாதித்தவர்கள் சதவீதம் 9 வரை உயந்த நிலையிலும் கடைகள் திறக்கப்பட்டது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.

  ஆனால் கடந்த 14 ஆம் தேதி மதுக்கடைகள் திறக்கும் போது 5.4 சதவீதமாகவும், 22ஆம் தேதி 2.8 சதவீதமாகவும் பாதிப்பு இருந்தது. அப்போது கூட 27 மாவட்டங்களில் மட்டுமே கடைகள் திறக்கப்பட்டது. தொற்று சற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் தொடர்ந்து குறைந்து வந்தாலும் கடைகள் திறக்க முதலமைச்சர் அனுமதிக்கவில்லை என்பதை குறிப்பிட்டு அமைச்சர் விளக்கம் அளித்தார். எனவே இந்த அரசு பற்றி தவறான தோற்றத்தை உருவாக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

  Published by:Suresh V
  First published:

  Tags: O Panneerselvam, Power cut, Senthil Balaji, TN Assembly