கொரோனாவால் முடங்கிய மண்பாண்ட தொழில்.... ₹1 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் 

சாம்பிராணி ஜாடி ஐஸ்கீரீம் கோப்பைகள், மண்பாண்டங்கள் வளைகுடா நாடுகள் வரை ஏற்றுமதியாகிறது. 

கொரோனாவால் முடங்கிய மண்பாண்ட தொழில்.... ₹1 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் 
மண்பாண்ட தொழில்
  • Share this:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக 1 கோடி ரூபாய் மதிப்பிலான மண்பாடங்கள் தேக்கமடைந்துள்ளது.

நெல்லை  மாவட்டம் குறிச்சி மற்றும் கூனியூர் உள்ளிட்ட பகுதிகளில் மண்பாண்ட தொழிலில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த காலங்களில் களிமண் அள்ளுவதில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக தொழில் செய்ய முடியாத நிலையில் இருந்தனா். கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக மண் எடுப்பதை தமிழக அரசு எளிதாக்கியுள்ளது.

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக மண்பாண்ட தொழிலில் ஈடுபடுவோர் தொழில் செய்ய முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். 50 நாட்களுக்கு பிறகு ஊரடங்கில் தளா்வு அறிவிக்கப்பட்டது. கோடை காலம் மண்பாண்ட தொழிலாளர்களுக்கான சீசன் காலம். தற்போது மண்பானைகள் ஜாடிகள் மற்றும் ரம்ஜான் நோன்பு குவளைகள் ஐஸ் கீரீம் கோப்பைகள்,  வாட்டா் பாட்டில்கள் தண்ணீா் குவளைகள் மண்பாண்ட பிரிட்ஜ் ஆகியவை அதிகளவில் விற்பனையாகும்.


ஆனால் ஏற்கனவே உற்பத்தி செய்த பொருட்கள் ஊரடங்கு தளா்விற்கு பிறகு தற்போது செய்து வரும் பொருட்கள் என ஏராளமான பொருட்கள் தேங்கியுள்ளது. பெரும்பாலும் இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்ய முடியாமலும் செய்த பொருட்களை உள்ளுரிலும் பெரிய அளவில் சந்தைபடுத்த முடியாமல் அவதிபட்டு வருகின்றனர்.இங்கு தயாராகும் சாம்பிராணி ஜாடி ஐஸ்கீரீம் கோப்பைகள், மண்பாண்டங்கள் வளைகுடா நாடுகள் வரை ஏற்றுமதியாகிறது.  மாவட்டத்தில் 1 கோடிக்கு அதிகமான மண்பாண்டங்கள் தேக்கமடைந்துள்ளது. கேரளா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு சரக்குகளை அனுப்புவதற்கு இ-பாஸ் பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.அதோடு தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டால் மண்பாண்டங்களுக்கு கிராக்கி இருக்காது மீதம் இருக்கும் 10 நாட்களிலாவது மண்பாண்டங்களை அண்டை மாநிலங்களுக்கு அனுப்ப தேவயான உதவிகளை செய்ய அரசு முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading