• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு!

தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு!

+2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு

+2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு

+ 2 மாணவர்களுக்காக தற்போது நடத்தப்பட்டு வரும் செயல்முறை தேர்வு மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
கொரோனா பரவல் அதிகரித்தையடுத்து தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு நடத்தப்படவிருந்த பொதுத்தேர்வை தமிழக அரசு தள்ளிவைத்துள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. சமீபத்திய நாட்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 2 லட்சத்தை கடந்து பதிவாகி வந்த நிலையில் இன்று 2.61 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த மார்ச் 25-ம் தேதி சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு கொண்டு வந்தது. நோய்த் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 12-ம் தேதி தலைமைச் செயலர். அரசு ஆலோசகர், அனைத்து துறை உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இரவு நேர ஊரடங்கு - ஞாயிறு முழு ஊரடங்கு:

இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் ஏப்ரல் 20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதே போல தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

+2 தேர்வு ஒத்திவைப்பு:

கொரோனா பரவல் கடுமையாக அதிகரித்துள்ளதன் காரணமாக தமிழகத்தில் +2 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் + 2 மாணவர்களுக்காக தற்போது நடத்தப்பட்டு வரும் செயல்முறை தேர்வு மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

+2 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அத்தேர்வு எப்போது நடத்தப்படும் என தமிழக அரசு விளக்கம் ஏதும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

  • கல்லூரி/பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணைய வழியாக வகுப்புக்களை எடுக்க வேண்டும்.

  • அரசு மற்றும் தனியார் கல்லூரி/பல்கலைக்கழக தேர்வுகள் இணைய வழியில் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.

  • கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் இணைய வழியாக மட்டுமே பயிற்சி வழங்க அனுமதிக்கப்படுகிறது

  • கோடை கால முகாம்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: