Home /News /tamil-nadu /

பேராசிரியர் அன்பழகனுக்கு இன்றும் தபால் கொண்டு வந்த போஸ்ட்மேன்.. நெகிழ்ச்சி சம்பவம்

பேராசிரியர் அன்பழகனுக்கு இன்றும் தபால் கொண்டு வந்த போஸ்ட்மேன்.. நெகிழ்ச்சி சம்பவம்

அன்பழகன் - போஸ்ட்மேன் சிதம்பரம்

அன்பழகன் - போஸ்ட்மேன் சிதம்பரம்

மறைந்த பேராசிரியர் அன்பழகனுக்கு 20 ஆண்டுகாலமாக தபால் கொண்டு வந்த போஸ்ட்மேன், இன்றும் அவரது உடலை கூட பார்க்க முடியாமல் சோகத்தில் திரும்பி உள்ளார்.

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.  கீழ்பாக்கத்தில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  பேராசிரியர் அன்பழகன் அண்ணாநகர் வீட்டில் இருந்தாலும் சரி, தற்போது இருக்கும் கீழ்பாக்கம் வீட்டிலும் சரி தினசரி தபால் கொண்டு வருபவர் போஸ்ட்மேன் சிதம்பரம்.

கடந்த 20 ஆண்டுகளாக இவர் தான் பேராசிரியருக்கு வரும் தபால்களை கொடுத்து வந்துள்ளார். இன்று காலை பணிக்கு வந்தபோதுதான் க.அன்பழகன் இறந்த செய்தி அவருக்கு தெரிய வந்திருக்கிறது. இன்றும் அவருக்கு வந்த தபாலை எடுத்துக்கொண்டு அஞ்சலி செலுத்த ஒரு மாலையும் வாங்கிக்கொண்டு சோகத்துடன் வந்தார்.

Also Read : அன்பழகன் மறைவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல்...!
 அங்கு நீண்ட வரிசையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த நின்றனர். ஒருபக்கம் கட்சி நிர்வாகிகள் வேறு வழியில் வீட்டிற்குள் செல்ல முயன்றதால் போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது. வரிசையில் நின்றால் குறைந்தது ஒருமணி நேரமாகும். மற்றொரு வழியில் கூட்டநெரிசலால் போலீசார் யாரையும் அனுமதிக்கவில்லை.


வரிசையில் நின்றால் தனது வேலை பாதிக்கும் மற்ற தபால்களை டெலிவரி செய்ய முடியாது. போலீசாரும் உள்ளே விடாமல் தடுத்ததால் சோகத்துடன் இருந்தார் சிதம்பரம். எப்படியாவது கடைசியாக அவரது முகத்தைப் பார்க்க வேண்டுமென ஆசைப்பட்டு போலீசாரிடம் கேட்டபோதும் வாய்ப்பில்லாமல் அவருக்கு போனது.

கடைசியில் வேறு வழியில்லாமல் மாலையையும் பேராசியருக்கு வந்த தபாலையும் போலீசாரிடம் கொடுத்து நீங்களே என் சார்பில் அஞ்சலி செலுத்துங்கள் என்ற படியே தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டார் போஸ்ட்மேன் சிதம்பரம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Published by:Vijay R
First published:

Tags: Anbazhagan

அடுத்த செய்தி