நாளைய முதல்வரே... எச்சரிக்கையை மீறி அண்ணாமலைக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய பாஜகவினர்

சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

சென்னையில் அனுமதி இல்லாமல் போஸ்டர் ஒட்டக்கூடாது என  மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அண்ணாமலைக்கு ஆதரவாக பாஜகவினர் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.

  • Share this:
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை,  பொறுப்பேற்பதற்காக கோவையில் இருந்து மூன்று நாள் பயணமாக இன்று சென்னை கிளம்பினார். இன்றும் , நாளையும் வழியெங்கும் உள்ள மாவட்டங்களில் அண்ணாமலைக்கு பா.ஜ.க சார்பில்  வரவேற்பு அளிக்கப்பட இருக்கின்றது.

கோவையிலிருந்து அண்ணாமலை புறப்படுவதற்கு முன்பு  தண்டுமாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினார்.  இரண்டு நாள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு வரும் 16-ம் தேதி பிற்பகல்  சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்க உள்ளார். மேலும் சென்னை செல்லும் வழியில் கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்திக்க உள்ளார்.

Also Read : ரஜினி ஆன்மீக அரசியலுக்கு ஆதரவு கொடுக்கனும் - அர்ஜூன் சம்பத்

இன்று  கோவை வ.உ.சி மைதானம் அருகே சாலையில்  அண்ணாமலைக்கு பா.ஜ.கவினர் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்த வரவேற்பினை ஏற்றுக்கொண்டு பயணத்தை அண்ணாமலை துவக்கினார்.  சின்னியம்பாளையம் , அவிநாசி ,திருப்பூர், பெருந்துறை ,சேலம் என பல்வேறு மாவட்டங்களில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

நாளை மறுநாள் தாம்பரம் முதல் தியாகராய நகர் வரை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிலையில் அவரை வரவேற்று பல்வேறு விளம்பர போஸ்டர்களை பாஜகவின் ஒட்டி வருகின்றனர். இந்த நிலையில் வடசென்னையில் ஓட்டப்பட்டுள்ள போஸ்டரில் 'நாளைய முதல்வரே' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே அதிமுக பாஜக வார்த்தை போர் நடைபெற்று வரும் நிலையில் இரண்டு கட்சிகள் சார்பில் சர்ச்சை கருத்துகளை தவிர்க்க உத்தரவிட்டுள்ளனர்.

Also Read :  ராம்நாடு, ஒரத்தநாடு என பல நாடுகள் இருக்கின்றன... நல்லா இருக்கிற தமிழ்நாட்டை ஏன் பிரிக்கணும் - நடிகர் வடிவேலு

இந்தநிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள நிலையில் இதுபோன்ற போஸ்டர் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சென்னையில் அனுமதி இல்லாமல் போஸ்டர் ஒட்டக்கூடாது என  மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது அதனை மீறி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: