கோவையில் மு.க.ஸ்டாலினை கேலி செய்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் கிழிப்பு

கோவையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினைக் கேலி செய்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டுள்ளது.

கோவையில் மு.க.ஸ்டாலினை கேலி செய்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் கிழிப்பு
மு.க.ஸ்டாலின் போஸ்டர்
  • Share this:
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக முதலமைச்சர் வேட்பாளராக மு.க.ஸ்டாலினும், அ.தி.மு.க முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இரண்டு கட்சிகளும் தேர்தல் பரப்புரைகளை சமூக வலைதளங்கள் மூலமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை காந்திபுரம், ராமநாதபுரம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை கிண்டலடிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை இம்சை அரசன் 23-ம் புலிகேசியாகவும், தி.மு.க பொதுச்செயலாளர் துரை முருகனை மங்குனி அமைச்சராகவும் சித்தரித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

மு.க.ஸ்டாலினை விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டர்


 


அதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் தன்னம்பிக்கை மிக்க தலைமையா? துண்டுச்சீட்டு தலைமையா என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

மு.க.ஸ்டாலினை விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டர்


இதேபோல மற்றொரு சுவரொட்டியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தி.மு.க இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி படத்துடன் உழைப்பை நம்பலாமா? பிறப்பை நம்பலாமா என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை கேலி செய்யும் வகையிலும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதேசமயம் எந்த அமைப்பின் சார்பாக ஒட்டப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் சுவரொட்டியில் இடம்பெறவில்லை. இந்நிலையில் காந்திபுரம் பகுதியில் ஒட்டப்பட்டு இருந்த இந்த சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து காட்டூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
First published: October 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading