• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Tamil nadu election results 2021 : ‘மே 6ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்கும் மு.க.ஸ்டாலின்’ : போஸ்டர் ஓட்டி கொண்டாடடும் தொண்டர்கள்

Tamil nadu election results 2021 : ‘மே 6ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்கும் மு.க.ஸ்டாலின்’ : போஸ்டர் ஓட்டி கொண்டாடடும் தொண்டர்கள்

போஸ்டர்

போஸ்டர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தேர்தல் முடிவுகள் வெளிவராத நிலையில், மே 6ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்கும் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் என சென்னை மயிலாப்பூரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன.

  • Share this:
    தமிழக சட்டமன்ற தேர்தல், ஏப்ரல் 6ஆம் தேதி நடடைபெற்றது. அன்று, பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இந்நிலையில், மயிலாப்பூர் கச்சேரி சாலை உள்ளிட்ட பல பகுதிகளில், திமுக, தொண்டர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

    அந்த போஸ்டரில், “மே 6-ல் முதலமைச்சராக பதவியேற்கும் தளபதி மு.க.ஸ்டாலினை வாழ்த்த வயதில்லை; வணங்குகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவு இன்னும் வராத நிலையில், தொண்டர்கள் இவ்வாறு போஸ்டர் ஒட்டி இருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தேர்தலுக்குப் பிந்தைய கருத்தக் கணிப்பில் திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டது.

    Must Read : Tamil Nadu Assembly Election Results 2021 Live Updates: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

     

    இந்நிலையில், நேற்று இரவு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் கருணாநிதி நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: