முதல்வர் வேட்பாளர் ரஜினி என மீண்டும் போஸ்டர் - வேண்டாமென்றாலும் கேட்காத ரசிகர்கள்

முதல்வர் வேட்பாளர் ரஜினி என மீண்டும் போஸ்டர் - வேண்டாமென்றாலும் கேட்காத ரசிகர்கள்

 • Share this:
  ரஜினி தலைமை மக்கள் மன்ற அறிவிப்பையும் மீறி திண்டுக்கல் நகர் முழுவதும் 2021ம் ஆண்டு முதல்வர் வேட்பாளர் ரஜினி என போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

  தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ரஜினி ரசிகர்கள் வருங்கால முதல்வரே விரைவில் கட்சி தொடங்க வேண்டும் என தமிழகமெங்கும் போஸ்டர் ஒட்டி வந்தனர்.

  இந்நிலையில் சென்னையில் உள்ள ரஜினி தலைமை மக்கள் மன்றம், இனி யாரும் ரஜினி தொடர்பாக போஸ்டர் ஒட்டக்கூடாது என அறிவிப்பு வெளியிட்டது. இதனை மீறி தற்போது திண்டுக்கல் நகர் முழுவதும் அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.  Also read: மதுரை மாணவி தற்கொலை: மத்திய மாநில அரசுகள் மாற்று வழியைச் சிந்தித்து செயல்படுத்த வேண்டும் - கமல்ஹாசன்

  "நாச்சிக்குப்பத்தின் மன்னன் ஆட்சி மலரட்டும்", "திராவிட அரசியல் இனி போதும்", "அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம்; இப்போ இல்லைன்னா இனி எப்பவும் இல்லை" என்றெல்லாம் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆங்காங்கே ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
  Published by:Rizwan
  First published: