முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழக சட்டப்பேரவைக்கான தபால் வாக்குப்பதிவு இன்று முதல் தொடங்குகிறது..

தமிழக சட்டப்பேரவைக்கான தபால் வாக்குப்பதிவு இன்று முதல் தொடங்குகிறது..

வாக்காளர்

வாக்காளர்

தமிழக சட்டப்பேரவைக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது. சென்னையில் தபால் வாக்குகளை பெற 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கொரோனா காலகட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதால், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதித்தவர்கள் தபால் வாக்குகளை அளிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 2,44,000 பேர் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பத்திருந்தனர்.

சென்னையில் 12,000 பேர் விண்ணப்பத்திருந்த நிலையில், 7,300 பேரின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில், தபால் வாக்குகளை பெற 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவும் நாளொன்றுக்கு, 15 வாக்குகளை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த குழுக்களில் வாக்குப்பதிவு அலுவலர்கள் 3 பேர், நுண் பார்வையாளர், காவலர், வீடியோ ஒளிப்பதிவாளர் ஆகியோர் இடம்பெறுவர். தபால் வாக்களிப்பவர்களுக்கான தேதி, நேரம் ஆகியவை முன்கூட்டியே செல்போன்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் எனவும், வீடுகளுக்கு நேரடியாக சென்று அதிகாரிகள் ஆய்வு செய்த பின், வாக்குச்சீட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க... நான் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு விவசாயி.. என்னை மக்கள் எளிதில் சந்திக்க முடியும்: அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி

இந்நிலையில், சென்னையில் 16 சட்டமன்றத் தொகுதிகளில் தபால் வாக்கு அளிப்பது தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தபால் வாக்கு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு இருமுறை மட்டுமே வாய்ப்பளிக்கப்படும் என்றும், தவறும் பட்சத்தில், வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க அனுமதியில்லை எனவும் கூறினார்.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் சேகரிக்கப்படும் தபால் வாக்குகள் பெட்டியில் வைக்கப்பட்டு சீலிடப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Post Office, TN Assembly Election 2021, Voters list