இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகத்தினருக்கு தபால் வாக்கு செலுத்த அனுமதி!

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகத்தினருக்கு தபால் வாக்கு செலுத்த அனுமதி!

தபால் வாக்கு

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் மே 2ம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகத்தினருக்கு தபால் வாக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுவை, கேரளா, மேற்குவங்கம். அசாம் என 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடந்த பிப்ரவரி 26ம் தேதி அன்று அறிவித்தார். இதனையடுத்து மேற்கண்ட 5 மாநிலங்களிலும் தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு அளிக்கலாம் ஆனால் அவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே தபால் வாக்குகள் செலுத்த முடியும் என சுனில் அரோரா தெரிவித்தார்.

இதனிடையே இத்தேர்தலில் முதல் முறையாக இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகத்தினருக்கு தபால் வாக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் தபால் வாக்கு அளிக்க அனுமதி:

1. லோகோ பைலட்
2. துணை லோகோ பைலட்
3. மோடார் மென்
4. கார்டு
5. டிக்கெட் பரிசோதகர்
6. ஏசி கோச் அடெண்டண்ட்
7. ஆர்.பி.எப்
8. அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்
9. ஏவியேஷன்
10. ஷிப்பிங்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் மே 2ம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் மார்ச் 12ம் தேதி முதல் மார்ச் 16ம் தேதி வரை தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் விண்ணப்பங்கள் கொடுப்பவர்களுக்கு மட்டுமே தபால் வாக்கு அளிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிவம் 12டி-யை வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மார்ச் 16ம் தேதிக்குள் நிலை அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Published by:Arun
First published: