வாட்ஸ்அப்பில் வெளியான தபால் வாக்கு : ஆசிரியை பணியிடை நீக்கம்?

வாட்ஸ்அப்பில் வெளியான தபால் வாக்கு : ஆசிரியை பணியிடை நீக்கம்?

வாட்ஸ் அப்

தென்காசியில் பதிவு செய்யப்பட்ட தபால் வாக்கு வாட்ஸ்அப்பில் வெளியானதால் வாக்குச்சாவடி தலைமை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளா ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

 • Share this:
  தென்காசியில் பதிவு செய்யப்பட்ட தபால் வாக்கு வாட்ஸ்அப்பில் வெளியானதால் வாக்குச்சாவடி தலைமை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளா ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

  தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே இருக்கின்றன. இதனால்  தேர்தல் ஆணையமும், தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

  தென்காசி மாவட்டம் சுரண்டையில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சகாய ஆரோக்கிய அனுஷ்டாள். இவர் வாக்குச்சாவடி தலைமை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தபால் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

  இந்நிலையில், சகாய ஆரோக்கிய அனுஷ்டாளின் பதிவு செய்யப்பட்ட தபால் வாக்கின் படம் வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் வெளியானது. இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் தேர்தல் அலுவலரிடம் புகார் கொடுத்தார்.

  இதனைத் தொடர்ந்து அந்த ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து அதன் நகலை வட்டார கல்வி அலுவலர் மூலம் அனுப்பி வைக்குமாறு பள்ளி தாளாளருக்கு மாவட்ட கல்வி அலுவலர் கோகிலா உத்தரவிட்டுள்ளார்.

  இதற்கிடையில், ஆசிரியை சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்தபுகார் மனுவில், “நான் சுரண்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். தற்போது தேர்தல் பணிக்காக வாக்குச்சாவடி தலைமை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளேன்.

  கடந்த 26ஆம் தேதி சங்கரன்கோவிலில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் பங்கேற்றேன். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் எனது வாக்குச்சீட்டை வாங்காமல் வந்து விட்டேன். இதுவரை எனது வாக்குச்சீட்டு தபாலிலும் எனக்கு வரவில்லை. ஆனால், அதன்பிறகு முகநூலில் எவ்வாறு வந்தது என்று எனக்கு தெரியாது.

  எனக்கு தெரியாமலேயே யாரோ இதனை செய்துள்ளனர். வாக்குச்சீட்டு பெற்றதற்காக நான் கையெழுத்து போடவில்லை. முகநூலில் வெளியிட்டவர் மீது விதிமுறைகளை மீறியது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், நிரபராதியான என் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

  Must Read : உண்மையை கூறி வாக்கு சேகரித்தால் எதிர்க்கட்சி பதவியாவது மிஞ்சும் - திமுகவை விமர்சித்த முதல்வர் பழனிசாமி

   

  ஆகவே, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். என் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். எனக்கு மீண்டும் வாக்குச்சீட்டு அளித்து ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு உத்தரவிட வேண்டும்.” இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published:

  சிறந்த கதைகள்