சென்னையில் காவலர்களுக்கான தபால் வாக்குப் பதிவு தொடங்கியது!

தென்சென்னை தொகுதிக்கான தபால் வாக்குப் பதிவு நந்தனம் கலைக் கல்லூரியில் காலை 7 மணிக்குப் பதில் 8 மணிக்குத் தொடங்கிய நிலையில் குறிப்பிட்ட பகுதிகளுக்கான அதிகாரிகள் வராததால் வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

Web Desk | news18
Updated: April 13, 2019, 12:33 PM IST
சென்னையில் காவலர்களுக்கான தபால் வாக்குப் பதிவு தொடங்கியது!
காவலர்களுக்கான தபால் வாக்குப் பதிவு
Web Desk | news18
Updated: April 13, 2019, 12:33 PM IST
சென்னை உட்பட 6 நாடாளுமன்றத் தொகுதிகளில் பணியாற்றும் காவலர்களுக்கான தபால் வாக்குப் பதிவு நடைபெற்றது.

வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் ஆகிய 6 தொகுதிகளுக்குட்பட்ட சென்னை பெருநகர பகுதி காவலர்கள் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தங்கள் தபால் வாக்குகளை அந்தந்தத் தொகுதிகளுக்குட்பட்ட குறிப்பிட்ட பள்ளிகளில் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்சென்னை தொகுதிக்கான தபால் வாக்குப் பதிவு நந்தனம் கலைக் கல்லூரியில் காலை 7 மணிக்குப் பதில் 8 மணிக்குத் தொடங்கிய நிலையில் குறிப்பிட்ட பகுதிகளுக்கான அதிகாரிகள் வராததால் வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து அதிகாரிகளுடன் காவலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மத்திய சென்னை தொகுதிக்கான தபால் வாக்குப் பதிவும் எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.

Also see... கருணாநிதி மறைவை நினைவு கூர்ந்து பிரசாரத்தில் கண்கலங்கிய உதயநிதி!  

தேர்தலுக்குப் பிறகு கிரண் பேடி மாற்றப்படுவார்: நமச்சிவாயம்

Also see... தமிழச்சி தங்கபாண்டியனை ஜே.சி.பி முலம் மலர் தூவி வரவேற்ற திமுக பிரமுகர்!


Also see...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...