போஸ்ட் ஆபீஸில் செயல்பாட்டில் இருக்கும் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தை (national savings certificate) மக்கள் அதிகம் விரும்ப என்ன காரணம்? என்ற் விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
போஸ்ட் ஆபீஸில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்ட 9 சிறுசேமிப்பு திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளனர். மக்கள் பலரும் இந்த திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த 9 சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி, சலுகைகள் குறித்த விவரத்தை நேற்றைய பதிவில் பார்த்தோம். அதை தவறவிட்டவர்கள் இந்த லிங்கில் பார்க்கலாம். தற்போது இந்த சிறு சேமிப்பு திட்டங்களில் மக்களால் அதிகம் விரும்படும் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் குறித்து இன்று விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க.. போஸ்ட் ஆபீஸில் ஜாயிண்ட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு அடிக்கடி எழும் சந்தேகம்!
இந்த திட்டத்தில் பிரதமர் மோடி முதலீடு செய்து இருப்பதக சமீபத்தில் கூட ஒரு தகவல் வேகமாக பரவியது குறிப்பிடத்தக்கது.
முதலில் இந்த திட்டத்தில் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தில் நீங்கள் சேர்ந்த பின்பு 5 ஆண்டுகளுக்கு பணத்தை எடுக்க முடியாது. இதில் ஜாயிண்ட் அக்கவுண்ட் வசதியும் உள்ளது. போஸ்ட் ஆபீஸில் இருக்கும் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் வருடத்துக்கு 6.8% வட்டி வழங்கப்படுகிறது. குறைந்தது ரூ. 1000 முதல் முதலீடு செய்யலாம். ஒருவேளை நீங்கள் ரூ. 1000 முதலீடு செய்தால் 5 வருடங்களுக்கு பிறகு உங்கள் கையில் இருக்கும் தொகை ரூ.1359.49 இந்த திட்டத்தில் அதிகபட்சமாக முதலீடு செய்வதற்கு எந்தவொரு வரம்பும் இல்லை.
இதையும் படிங்க.. போஸ்ட் ஆபீஸில் சேவிங்க்ஸ் அக்கவுண்ட் தொடங்குவது ஏன் முக்கியம் தெரியுமா?
ஒவ்வொரு வருடத்துக்கும் கூட்டு வட்டி கணக்கிடப்பட்டு மெச்சூரிட்டி காலம் முடியும் போது முதலீட்டாளர்களிடம் வழங்கப்படுகிறது. அதனால் தான் இந்த திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரிட்டர்மெண்ட் பணம், பிஎஃப் பணம் போன்றவற்றை கையில் வைத்திருப்பவர்கள் தயங்காமல் இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் லாபம் பார்க்கலாம். இதில் ஒருவர் ரூ.5 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 5 வருடங்களின் முடிவில் ரூ.6.94 லட்ச ரூபாய் வரை கிடைக்கும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.