போஸ்ட் ஆபீஸில் (post office) ஜாயிண்ட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு அடிக்கடி வரும் சந்தேகத்துக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.
போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு என்பதை இப்போது நிறைய மிடில் கிளாஸ் குடும்பங்கள் விரும்பி செய்கின்றனர். அதிலும் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட சிறு சேமிப்பு திட்டங்களான தேசிய சேமிப்புச் சான்றிதழ், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சேமிப்பு திட்டத்தில் தனிநபர் அக்கவுண்ட் அல்லது ஜாயிண்ட் அக்கவுண்ட் மூலம் சேமிக்க முடியும். பொதுவாகவே போஸ்ட் ஆபீஸில் தனிநபர் அக்கவுண்ட் மற்றும் ஜாயிண்ட் அக்கவுண்ட் சேமிப்பு செயல்பாட்டில் உள்ளது.
இந்த ஜாயிண்ட் அக்கவுண்டில் கணவன் - மனைவி மற்றும் பெற்றோர்கள் - பிள்ளைகள் இருவரும் சேமிக்கலாம். பெரும்பாலும் இந்த ஜாயிண்ட் அக்கவுண்ட் சேமிப்பு கணக்கில் முதலீடு செய்யும் போது பலருக்கும் வரும் சந்தேகம் முதிர்வு தொகை எப்படி பிரித்து வழங்கப்படும்? ஒருவேளை கணக்கை மூட விரும்பினால் அதற்கான படிகள் என்ன? என்பது தான். இந்த சந்தேகத்திற்கான விடை இதோ. ஆரம்பத்தில் ஜாயிண்ட் அக்கவுண்ட் வைத்திருப்பர்களுக்கு பணம் பிரித்து தருவதில் இருந்த விதிமுறைகளை மாற்றி சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு தெளிவுப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. நீங்கள் ஜாயிண்ட் அக்கவுண்டடி மூட விரும்பினால் அல்லது டூப்:ளிகேட் பாஸ்புக்கு விண்ணப்பிக்க விரும்பினால் கட்டாயம் இந்த விதிமுறையை பற்றி தெரிந்து வைத்திருக்கவேண்டும்.
ஜாயிண்ட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் சேமிப்பு திட்டம் முடிந்த உடன் 2 வகையில் பணத்தை பெற்று கொள்ளலாம். இதற்கு ஏ மற்றும் பி என இரு வகைகள் செயல்பாட்டில் உள்ளன. போஸ்ட் ஆஃபீஸில் செயல்பாட்டில் இருக்கும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் இந்த இரண்டு திட்டத்திலும் அதிகபட்சமாக மூன்று பேர் மட்டுமே இணைப்புக் கணக்கு திறக்க முடியும் என்பது பொதுவான விதிமுறை இப்போது இந்த தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தை எடுத்து கொண்டால் அதில் ஏ பிரிவில் ஜாயிண்ட் அக்கவுண்ட் வைத்திருக்கும் 2 பேருக்கும் அல்லது 3 பேருக்கும் முதிர்வு தொகை பிரித்து வழங்கப்படும்.
இதையும் படிங்க.. SBI நகைக்கடனில் இவர்களுக்கு மட்டும் இத்தனை சலுகைகள்! ஏன் தெரியுமா?
இதுவே பி பிரிவு என்றால் 3 பேரில் ஒருவருக்கு மட்டுமே முதிர்வு தொகை, கணக்கு சேவைகள் கையாள அனுமதி வழங்கப்படும். அதாவது முதல் பயனாளி மட்டுமே பெற முடியும். எனவே, நீங்கள் முதலில் ஏ மற்றும் பி பிரிவை பற்றி நன்கு தெரிந்து கொண்ட பின்பு இந்த வகையான கணக்கை தொடங்கி பணத்தை சேமிக்கலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.