Home /News /tamil-nadu /

மத்திய அரசு கைவிட்ட போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தை மாநில அரசு தொடரவேண்டும்... திருமாவளவன் வலியுறுத்தல்

மத்திய அரசு கைவிட்ட போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தை மாநில அரசு தொடரவேண்டும்... திருமாவளவன் வலியுறுத்தல்

காஞ்சிபுரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.

காஞ்சிபுரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.

காஞ்சிபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்பை மத்திய அரசு கைவிடுகிறது., அது கைவிட்டாலும் மாநில அரசு நிதியிலிருந்து அந்த மாணவர்களுக்கான உதவித் தொகையை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி காஞ்சிபுரம் காந்தி சாலை பெரிய தூண் அருகில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாசறை செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

    அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கொட்டிய மழையையும் பொருட்படுத்தாது கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Rizwan
    First published:

    Tags: Scholarship, Thol. Thirumavalavan, VCK

    அடுத்த செய்தி