Home /News /tamil-nadu /

கண்டெய்னர் லாரிகள் 2-வது நாளாக ஸ்டிரைக்.. சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி பாதிப்பு

கண்டெய்னர் லாரிகள் 2-வது நாளாக ஸ்டிரைக்.. சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி பாதிப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Container lorry strike : கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படும் சரக்குகளை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் பணியில், 5000-க்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன.

    துறைமுக கண்டெய்னர் லாரிகள் 2ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பல கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் , வாடகையை உயர்த்தி தரக்கோரி வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படும் சரக்குகளை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் பணியில், 5000-க்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் கண்டெய்னர் லாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வாடகை உயர்த்தி தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், நேற்று முதல் வாடகையை உயர்த்தி தர வலியுறுத்தி கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடந்த 2014ஆம் ஆண்டு டீசல் விலை 48 ரூபாயாக இருந்தாகவும், தற்போது 100 ரூபாயைக் கடந்தது விற்பனையாவதாகவும் கூறும், கண்டெய்னர் உரிமையாளர்கள், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

    Must Read : 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் இபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வாகிறார்

    மேலும், இன்சூரன்ஸ், எப்.சி., உதிரி பாகங்களில் விலை கடுமையாக உயர்ந்திருப்பதாகவும் எனவே, தங்களுக்கு வாடகையை உடனடியாக உயர்த்தி தர வேண்டும் என்றும் கூறி நேற்று முதல் கண்டெய்னர் லாரிகளை ஓட்டாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இன்று 2ஆவது நாளை எட்டியுள்ளது. கண்டெய்னர் லாரி உரிமையாளர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Chennai, Lorry strike

    அடுத்த செய்தி