ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

காற்றில் கலந்தார் வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம்..! வயது முதிர்வால் காலமானார்..!

காற்றில் கலந்தார் வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம்..! வயது முதிர்வால் காலமானார்..!

சுப்பு ஆறுமுகம்

சுப்பு ஆறுமுகம்

கலைமாமணி உள்ளிட்ட பல உயரிய விருதுகளை பெற்ற இவருக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai | Chennai [Madras]

    வில்லிசை பாட்டு கலைஞர் பத்மஸ்ரீ சுப்பு ஆறுமுகம் வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்றிரவு காலமானார்.

    திருநெல்வேலி மாவட்டம் சந்திர புதுகுளம் என்ற கிராமத்தில் 1928 ஆம் ஆண்டில் பிறந்த வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் ( 94) வயது முதிர்வின் காரணமாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட அவர் நேற்றிரவு உயிரிழந்தார்.தன்னுடைய 14வது வயதிலே "குமரன் பாட்டு" என்ற கவிதைதொகுப்பு மூலம் பிரபலமடைந்த சுப்பு ஆறுமுகம் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் உதவியால் சென்னையில் தங்கி கல்கி எழுதிய காந்தியின் சுயசரிதையை முதன் முதலாக வில்லுபாட்டாக பாடினார்.

    மேலும் கலைவாணரது 19 திரைப்படங்களுக்கும், நடிகர் நாகேஷின் ஏறக்குறைய 60 திரைப்படங்களுக்கும் நகைச்சுவைப் பகுதிகளை சுப்பு ஆறுமுகம் எழுதி அன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களிலும் பங்களிப்பை வெளிபடுத்திய அவர் காந்தி கதை, திரும்பி வந்த பாரதி, திலகர் கதை, புத்தர் கதை இப்படி ஏராளமான வில்லுப்பாட்டுகளை இசைத்துள்ளார்.

    இதையும் படிங்க | உ.பி முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் காலமானார்!

    அவரது இசைப்பணி காரணமாக வில்லிசை வேந்தர் என போற்றப்படுவதுடன் மத்திய அரசின் சார்பில் உயரிய விருதுககளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது கடந்த 2021 ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது. கலைமாமணி உள்ளிட்ட பல உயரிய விருதுகளை பெற்ற இவருக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    சுமார் 1000க்கும் மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை ஆலயங்களில், வானொலியில், தொலைக்காட்சிகளில் ஆசுகவியாக அவ்வப்போது இயற்றி அவற்றைத் தன் வில்லிசையின் மூலம் தமிழக மக்களின் ரசனையை நேரிடையாகப் பெற்றார்.

    இந்த நிலையில் நேற்று இவர் வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார். இவரின் உடல் சென்னை கே.கே.நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.அவருடைய உறவினர்கள், ரசிகர்கள், இசை கலைஞர்கள் என ஏராளமானோர் அவருடைய உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Death, Singer