நான் அவ்வளவு பெரிய ரவுடி இல்லை: பினு கதறல்

news18
Updated: February 13, 2018, 3:30 PM IST
நான் அவ்வளவு பெரிய ரவுடி இல்லை: பினு கதறல்
ரவுடி பினு
news18
Updated: February 13, 2018, 3:30 PM IST
காவல்துறை நினைப்பதுபோல் தான் ஒன்றும் பெரிய ரவுடி இல்லை என காவல்துறை முன்பு சரணடைந்த ரவுடி பினு கூறியுள்ளார்.

கடந்த 6ஆம் தேதி சென்னையை அடுத்த மலையம்பாக்கத்தில் 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் புடைசூழ தனது 50வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ரவுடி பினு ஈடுபட்டார்.

இது குறித்த ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், துப்பாக்கி முனையிலும், தப்பி ஓடியவர்களையும் விரட்டியும் 75 ரவுடிகளை கைது செய்தனர்.

அப்போது தப்பிச் சென்ற பினுவை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், சென்னையை அடுத்த ஆவடியில், அம்பத்தூர் துணை ஆணையர் சர்வேஸ்ராஜ் முன்னிலையில் ரவுடி பினு இன்று காலை சரணடைந்தார்.

இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பினு சுய வாக்குமூலம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தான் நீரிழிவு நோயாளி என்றும், காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக காரிலேயே சுற்றிவந்ததாகவும், காவல்துறை நினைப்பது போல் தான் ஒன்றும் பெரிய ரவுடி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, தான் திருந்தி வாழ விருப்பப்பட்டதாகவும், 50வது பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாட விரும்பிய தனது தம்பிதான் தன்னை சென்னைக்கு அழைத்து வந்ததாகவும் பினு கூறியுள்ளார்.
Loading...
First published: February 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்