ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் முற்றுகை போராட்டம்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் முற்றுகை போராட்டம்

தமிழக கவர்னரை கண்டித்து முழக்கம் எழுப்பும் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர்.

தமிழக கவர்னரை கண்டித்து முழக்கம் எழுப்பும் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர்.

கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை மற்றும் போராட்டம் நடைபெற்ற இடங்களில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தை நடத்தினர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பை தீவிரவாத அமைப்பு என பேசிய தமிழக ஆளுநர் கூறியது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சமீபத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தீவிரவாத அமைப்பு என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். இதனை கண்டிக்கும் விதமாக இந்த முற்றுகை போராட்டம் சென்னை பனகல் மாளிகை அருகே ஆளுநர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

இதன் காரணமாக கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை மற்றும் போராட்டம் நடைபெற்ற இடங்களில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் முகமது ஷேக் அன்சாரி கூறுகையில், எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் ஆளுநர் இவ்வாறு பேசியது கண்டிக்க தக்கது எனவே மத்திய அரசு ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என கூறினார்.

மேலும் தமிழக ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் குரலாகத்தான் இவ்வாறு பேசியுள்ளார். ஆனால் எங்கள் மீது மக்கள் அன்பு வைத்துள்ளனர். நாங்கள் மக்களின் போராட்டங்களுக்கு முன் நின்று துணை நிற்போம் என்றார்.

ஆளுநர் இவ்வாறு கூறியதை பல்வேறு அமைப்புகள் கண்டித்து எங்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி உள்ளனர்.

மேலும் தமிழக முதல்வர் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என முகமது ஷேக் அன்சாரி தெரிவித்தார்.

Published by:Musthak
First published:

Tags: Tamil Nadu Governor