• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கன்னியாகுமரியைச் சேர்ந்த தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கப்போகும் போப் பிரான்சிஸ்

கன்னியாகுமரியைச் சேர்ந்த தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கப்போகும் போப் பிரான்சிஸ்

Devasahayam

Devasahayam

தேவசகாயம் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றியதால் அவர் கைது செய்யப்பட்டு 1752ஆம் ஆண்டு கொல்லப்பட்டதாக வாடிகன் செய்திக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன.

  • Share this:
கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள், பிஷப் போன்றவர்களுக்கு மட்டுமே இதுவரை புனிதர் பட்டம் வழங்கப்பட்டு வந்த நிலையில் முதல் முறையாக இந்தியாவைச் சேர்ந்த சாமானியர் ஒருவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட இருக்கிறது. இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய கன்னியாகுமரியைச் சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரான கன்னியாகுமரியைச் சேர்ந்த தேவசகாயம் என்ற சாதாரண மனிதருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுமென வாடிகனில் உள்ள திருச்சபை கூட்டமைப்பு முறைப்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவைச் சேர்ந்த சாமானியர் ஒருவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். மேலும் தேவசகாயம் உட்பட உலகளவில் 6 பேருக்கு அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி புனிதர் பட்டம் வழங்கப்படுமெனவும், வாடிகனில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also read:   2021 Maruti Celerio: ரூ.4.99 லட்சத்தில் அடுத்த தலைமுறை மாருதி செலரியோ.. இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் அறிமுகம்

யார் இந்த தேவசகாயம்?

அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட பகுதியும் தற்போதைய தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நட்டாலம் அருகேயுள்ள பள்ளியாடி எனும் கிராமத்தில் வாசுதேவன் - தேவகி தம்பதியருக்கு 23.4.1712ஆம் ஆண்டு மகனாக பிறந்தவர். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் நீலகண்ட பிள்ளை. இவருடைய தந்தை வாசுதேவன், திருவிதாங்கூர் அரசவையில் செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்தார், அதன் காரணமாக தனது மகன் நீலகண்ட பிள்ளையையும் அரசில் வேலைக்கு சேர்த்துவிட்டார்.

மதமாற்றம்:

1741ஆம் ஆண்டு டட்சு கப்பல் படைகள் குளச்சல் துறைமுகத்தை கைப்பற்றும் நோக்கில் போரிட்டன. இதில் டட்சு படைகள் தோற்ற போது அப்படையில் கேப்டனான யூஸ்டாசியஸ் டி லனாய் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் அவரை மன்னித்து திருவிதாங்கூர் படையில் மன்னர் சேர்த்தார். பின்னர் அரசரின் நம்பிக்கையை பெற்று யூஸ்டாசியஸ் டி லனாய் தளபதியாக உயர்ந்தார். யூஸ்டாசியஸ் டி லனாய்-ன் பழக்கத்தால் அவர் பின்பற்றிய கிறிஸ்துவ மதத்தினால் ஈர்க்கப்பட்ட நீலகண்ட பிள்ளை தன்னை கிறிஸ்துவ மதத்தில் இணைத்துக்கொண்டு லாசர் என பெயரை மாற்றிக் கொண்டார். கடவுள் ஊழியன் என பொருள்படும் வகையில் தேவசகாயம் எனும் தனக்கு பெயர் சூட்டிக்கொண்டார்.

Also read:   கன்னியாகுமரியைச் சேர்ந்த தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கப்போகும் போப் பிரான்சிஸ்

தேவசகாயம் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றியதால் அவர் கைது செய்யப்பட்டு 1752ஆம் ஆண்டு கொல்லப்பட்டதாக வாடிகன் செய்திக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன. இந்நிலையில் 2012ஆம் ஆசீர்வதிக்கப்பட்டவராக போப் ஆண்டவரால் அறிவிக்கப்பட்டார். தற்போது அவர் புனிதராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேவசகாயம் புனிதர் பட்டம் பெறும் முதல் தமிழர் என்பதும் கவனிக்கத்தக்கது.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: