அனல்மின் நிலையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்போவதில்லை என்ற முடிவை எடுக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பூவுலகின் நண்பர்கள் இயக்கதைச் சேர்ந்த சுந்தர்ராஜன் வலியுறுத்தியுள்ளார்.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தமிழகத்தில் சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறது. மக்கள் போராட்டமாக இல்லாமல் நீதிமன்றம் வாயிலாகவும், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்து தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலமாக தங்களது பங்களிப்பைத் தொடர்ந்து வருகிறது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு. அணுமின் நிலையங்கள், மீத்தேன் திட்டம், எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்களை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்து எதிர்த்துவருகிறது.
அதேபோல, அனல் மின் நிலையங்களுக்கும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. எண்ணூர் அனல்மின் நிலையக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் முக்கிய நபராக சுந்தர்ராஜன் இருந்துவருகிறார். இந்தநிலையில், தமிழகத்தில் அனல் மின் நிலையங்கள் அமைப்பதில்லை என்ற முடிவை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சுந்தர்ராஜன் கோரிக்கைவைத்துள்ளார்.
இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘புதுபிக்கக் கூடிய ஆற்றல்களை அதிகளவில் பயன்படுத்தும்விதமாக “புதிய அனல் மின்நிலையங்கள்” அமைக்க அனுமதி தரப்போவதில்லை என குஜராத்தும், இந்தியாவிலேயே அதிகமான நிலக்கரி சுரங்கங்கள் உள்ள சத்தீஸ்கர் மாநிலமும் அறிவித்துவிட்டன. ஆனால் தமிழ்நாடு எண்ணூரிலும், உடன்குடியிலும் புதிதாக அமைக்கிறது.
கச்சத்தீவை 99 ஆண்டுகள் குத்தகைக்கு கேட்க வேண்டும்: மத்திய அரசுக்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
ஒருபக்கம் காலநிலை மாற்றம் குறித்த முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ள தமிழகரசு இன்னொருபக்கம் புதிய அனல் மின்நிலையங்களை அமைப்பது முரணாகும் முதல்வரே. எது குஜராத் மக்களுக்கு நல்லது கிடையாதோ அது தமிழ்மக்களுக்கும் நன்றல்ல’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.