நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவப் படிப்பில் சேர முடியாத கூலித்தொழிலாளியின் மகன்

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவப் படிப்பில் சேர முடியாத கூலித்தொழிலாளியின் மகன்

தந்தையுடன் மாணவர் மணிகண்டன்.

கூலித்தொழிலாளியின் மகனான மணிகண்டன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவப் படிப்பில் சேர முடியாத அவல நிலைக்கு ஆளாகியுள்ளார்.

  • Share this:
புதுச்சேரி புராணசிங்குபாளையம் கிராமத்தின் பாதி பகுதி புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் மீதி தமிழ்நாட்டிலும் உள்ளது. தமிழ்நாட்டின் கீழ் வரும் புராணசிங்குபாளையத்தில் வசிப்பவர்  மணிகண்டன். இவர் எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை புராணசிங்கு பாளையத்தில் உள்ள புதுச்சேரி அரசு தொடக்கப்பள்ளியிலும், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை புராணசிங்கு பாளையத்தில் உள்ள புதுச்சேரி அரசு பாவேந்தர் பாரதிதாசன் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் படித்தார். அதைத்தொடர்ந்து மருத்துவத்துக்காக நீட் தேர்வு எழுதினார்.

குடிசை வீட்டில் வசிக்கும், கூலித்தொழிலாளியின் மகனான மணிகண்டன், எந்தவொரு சிறப்புப் பயிற்சியும் எடுக்காமல் கடந்த 2019ல் நீட்டில் 170 மதிப்பெண் எடுத்தார். தொடர்ந்து படித்து, 2020ல் 500 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் 86,541 இடத்தைப் பிடித்தார்.

Also read: யார் குற்றவாளி? நானா அல்லது ஜெயலலிதாவா- ஆ.ராசா ஆவேசம்!

இவர் தமிழகப் பகுதிக்குள் வருபவர் என்பதால் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் சேர்க்கைக்காக தமிழக அரசில் விண்ணப்பித்தார். ஆனால் அவர் புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் கல்வியை முடித்ததால், அவரது விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு நிராகரித்துவிட்டது.

தமிழகத்தில் பிற மாநில மாணவர்கள் 5 ஆண்டுகள் அரசுப் பள்ளியில் தொடர்ந்து படித்தால் அவர்களுக்கு தமிழக குடியுரிமை பெற்று அவர்கள் பொதுப்பிரிவில் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்ற விதிமுறை உள்ளது. அதே விதிமுறைகள் புதுச்சேரி அரசில் இருந்தாலும் சென்டாக் (அரசின் சேர்க்கை குழு) மூலம் விண்ணப்பிக்க புதுச்சேரி அரசில் விதிமுறை இல்லை. எனவே அவர் புதுச்சேரி அரசின் மூலம் எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் சேர்க்கைக்காக சென்டாக்குக்கும் விண்ணப்பிக்க இயலவில்லை.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: