அனைத்து உயிர்களிடமும் அன்புகாட்டுங்கள்...விபத்தில் கால்கள் செயலிழந்த நாய்க்கு வீல்சேர் தயாரித்த ஏழைத் தம்பதி

கடலூரில் நாய்கள் மீது பாச மழையை பொழிந்துவரும் ஒரு ஏழைத் தம்பதி, விபத்தில் கால்கள் செயலிழந்த நாய்க்கு வீல்சேர் தயாரித்துக் கொடுத்துள்ளனர். நாய் மீண்டும் நடப்பதை கண்டு அவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • Share this:
கடலூர் ஆல்பேட்டையைச் சேர்ந்த சுதா, கண்ணன் தம்பதி சலவைத் தொழில் செய்துவருகின்றனர். குழந்தை இல்லாத இவர்கள் சாலையோரம் சுற்றித் திரியும் நாய்களை குழந்தைகளைப் போல பாவித்து பராமரித்துவருகின்றனர்.

சாலை விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் கேட்பாரற்றுக் கிடந்த நாய் ஒன்றைக் கண்டு துடிதுடித்துப் போன அவர்கள், அதை மீட்டு சிகிச்சையளித்தனர். நாயின் பின்னங்கால்கள் செயலிழந்துவிட்டதால் நடக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
குணசேகர் எனப் பெயரிட்டு மற்ற நாய்களுடன் சேர்த்து அதனை பராமரித்து வந்த தம்பதியர், மற்ற நாய்களைப் போல நடக்க முடியவில்லையே என்ற அதன் ஏக்கத்தை புரிந்துகொண்டனர்.


நாயை நடக்கவைக்க அதற்கு ஆன்லைனில் வீல்சேர் ஆர்டர் செய்ய அவர்கள் முயன்றபோது, 5 ஆயிரம் ரூபாய் என தங்கள் சக்திக்கு மீறிய விலையாக இருக்கிறதே என எண்ணி வருந்தினர். பின்னர் யூடியூப் பார்த்து 900 ரூபாய் செலவில் கண்ணன் செய்து கொடுத்த வீல்சேரின் உதவியால் மகிழ்ச்சியுடன் வலம்வருகிறான் குணசேகர்.அனைத்து உயிர்களிடமும் அன்புகாட்டுங்கள் எனக் கூறிய இந்த தம்பதி, ஆதரவற்ற நாய்களுக்கு கைப்பிடி உணவாவது கொடுங்கள் என வேண்டி கேட்டுக்கொண்டனர்.
First published: June 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading