தி.மு.க எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதி- உட்கட்சி பிரச்சனை காரணமா?

பூங்கோதை ஆலடி அருணா

தி.மு.க எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சையளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் பூங்கோதை ஆலடி அருணா. தி.மு.க எம்.எல்.ஏவாக இருந்துவரும் அவர் கட்சியின் முக்கிய முகமாக அறியப்படுகிறார். கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தின்போது தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவிவகித்தார். 2006-ம் ஆண்டு அப்போதைய திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் தி.மு.க சார்பில் போட்டியிட்டுவென்றார். மீண்டும், 2016-ம் ஆண்டு ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு வென்று தற்போது எம்.எல்.ஏவாக இருந்துவருகிறார். இந்தநிலையில், திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி சந்திப்புலிலுள்ள ஷிபா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  அவரது உடல்நிலை குறித்து ஷிபா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா மயக்க நிலையில் எங்களுடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகிறார். தற்போது, விழித்துள்ளார். அவருடைய உடல்நிலை குறித்து அளவீடுகள் திருப்தியாக உள்ளன. அவருக்கு, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சையளிக்கப்படுகிறது. மருத்துவர்கள் குழு தொடர்ந்து அவரை கண்காணித்துவருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  அண்மையில், தி.மு.கவில் நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் விவகாரத்தில் மனஅழுத்தத்தில் இருந்துவந்தார். அதன் காரணமாக நேற்று இரவு அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை உட்கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.
  Published by:Karthick S
  First published: