வாஷிங் மெஷின், சிலிண்டர்களை வைத்து பூந்தமல்லி பாமக வேட்பாளர் பிரச்சாரம்

பாமக வேட்பாளர் ராஜமன்னார்

ஆட்டோவிற்கு மானியம், உதவித்தொகை உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளும் இடம் பெற்றுள்ளன...

 • Share this:
  பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ராஜமன்னார் வாஷிங் மெஷின் மற்றும் 6 சிலிண்டர்களை வைத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

  பூந்தமல்லி தனி சட்டமன்ற தொகுதியில், அதிமுக கூட்டணியின் பாமக வேட்பாளர் ராஜமன்னார் போட்டியிடுகிறார். அவர், இன்று பூந்தமல்லி அம்மா நகர் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திறந்த வேனில் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

  முன்னதாக அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வருடத்திற்கு 6 சிலிண்டர்கள், வாஷிங் மெஷின் ஆகியவை கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்ததை நினைவுபடுத்தும் விதமாக, ஆறு சிலிண்டர்கள் மற்றும் புதிய வாஷிங் மெஷின் ஆகியவற்றை வைத்து பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தார்.

  அத்துடன்,  ஆட்டோவிற்கு மானியம், உதவித்தொகை உள்ளிட்டவைகள் குறித்த வாசகங்களும் அங்கே வைக்கப்பட்டிருந்தன.

  Must Read : 1 கோடி ரூபாய் பறிமுதல்: எம்.எல்.ஏ. கார் ஓட்டுனர் உள்ளிட்ட 4 பேர் கைது

   

  தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், வேட்பாளர்கள் பல்வேறு உத்திகளை கையாண்டு வாக்காளர்களை கவரும் நோக்கில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

   

  - பூந்தமல்லி செய்தியாளர், சோமசுந்தரம்
  Published by:Suresh V
  First published: