Home /News /tamil-nadu /

பண மோசடி புகார்- யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன்

பண மோசடி புகார்- யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன்

கார்த்திக் கோபிநாத்

கார்த்திக் கோபிநாத்

யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு பூந்தமல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஆவடி அடுத்த மிட்டனமல்லி பகுதியை சேர்ந்தவர் யூடியூபர் கார்த்திக் கோபிநாத். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலை புணரமைப்பதாக கூறி பல லட்சம் ரூபாய் வசூல் செய்ததாக இந்து அற நிலையத்துறை சார்பில் கார்த்திக் கோபிநாத் மீது புகார் அளிக்கப்பட்டது. அதனையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கார்த்திக் கோபிநாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அவரை ஜாமீனில் விடுவிக்க கோரி அவரது வக்கீல்கள் சார்பில் பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்திருந்தனர். இன்று மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமீன் கொடுப்பதாக உத்தரவிட்டுள்ளார். நிபந்தனை ஜாமீனா அல்லது நிபந்தனையற்ற ஜாமீனா என்பது மாலையில் தெரியவரும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த வாரம் கார்த்திக் கோபிநாத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு அளித்த நிலையில் அதனை பூந்தமல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேபோல கார்த்திக் கோபிநாத்தின் தாக்கல் செய்த ஜாமீன் மனு கடந்த வாரம் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவதாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவில் கார்த்தி கோபிநாத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Published by:Karthick S
First published:

அடுத்த செய்தி