• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அரசால் வீடு இடிக்கப்பட்டு 9 மாதங்களாக சமுதாயக் கூடத்திலேயே வாழும் 9 குடும்பங்கள்- உதவுமா அரசு

அரசால் வீடு இடிக்கப்பட்டு 9 மாதங்களாக சமுதாயக் கூடத்திலேயே வாழும் 9 குடும்பங்கள்- உதவுமா அரசு

Youtube Video

சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே அரசால் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று வீடுகள் இல்லாமல், 9 குடும்பங்களைச் சேர்ந்தோர் 9 மாதங்களாக தங்க இடமில்லாமல் சமுதாயக் கூடத்தில் தங்கியிருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

  • Share this:
    திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில், 60 ஆண்டுகளாக 9 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பிரதான சாலை அருகே குடிசைகள் அமைத்து தங்கி வந்தனர். சாலை விரிவாக்கத்துக்காக அவர்களின் ஆக்கிரமிப்பு குடிசைகளை கடந்த ஜனவரி 13ம் தேதி வருவாய்த் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் அகற்றினர். 3 தலைமுறைகளாக அங்கேயே வசித்து வந்தவர்களின் வீடு திடீரென இடிக்கப்பட்டதால் எங்கு செல்வதென தெரியாமல் தவித்து நின்றவர்களை, சமூக நலக்கூடத்தில் ஊராட்சி நிர்வாகம் தங்கவைத்தது.

    இந்நிலையில் தங்க இடமும், வீடும் தேவை என்ற தங்கள் கோரிக்கையை, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, சுற்றுப் பயணமாக வந்த மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்தனர்.

    9 மாத காலமாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லாததால், சமூகநலக்கூடத்திலேயே 9 குடும்பத்தினரும் தங்கியுள்ளனர். நலக்கூடம் அருகே முட்புதர்கள் உள்ளதால் விஷபூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்து பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

    ஆட்சிக்கு வந்தால் நிலம் மற்றும் வீடுகள் கட்டித்தரப்படும் என்று தேர்தலுக்கு முன்பு மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை, நிறைவேற்ற வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: