தி.மு.க தூர்வார இருந்த குளத்தை இரவோடு இரவாக தூர் வாரிய பொதுப்பணித்துறை!

குளம் தூர்வாரல்

நேற்று இரவு இரவோடு இரவாக நெடுங்கூர் குளத்தை ஜேசிபி இயந்திரங்களை கொண்டு அரசு சார்பில் மாவட்ட வருவாய் துறையினர் முன்னிலையில் தூர் வாரப்பட்டு வருகிறது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தி.மு.க சார்பில் இன்று குளம் தூர் வாரப்பட இருந்த நிலையில், நேற்று இரவோடு இரவாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் குளத்தை தூர் வாரியுள்ளனர்.

  தி.மு.க இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி விவசாயம் செழிக்க நீராதாரங்களை காக்க குளங்கள் தூர் வார அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் வி.செந்தில் பாலாஜி மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள நெடுங்கூர், உப்பிடமங்கலம், ஈசனத்தம் ஆகிய இடங்களில் உள்ள குளங்களை இன்று தூர் வார தி.மு.க சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்.

  இந்நிலையில் நேற்று இரவு இரவோடு இரவாக நெடுங்கூர் குளத்தை ஜேசிபி இயந்திரங்களை கொண்டு அரசு சார்பில் மாவட்ட வருவாய் துறையினர் முன்னிலையில் தூர் வாரப்பட்டு வருகிறது. இந்த குளத்தை தூர் வார ஏற்கனவே குடி மராமத்து பணிகள் திட்டம் மூலமாக டெண்டர் விடப்பட்டுள்ளது. எனவே அதன்படி குளம் தூர் வாரப்படுகிறது என அரசு தரப்பில் கூறப்படுகிறது.

  தி.மு.க சார்பில் இன்று தூர் வாரப்படும் என கூறியிருந்த நிலையில், அரசே இரவோடு இரவாக குளத்தை தூர் வாரி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Also see:

  Published by:Sankar
  First published: