‛கார்ல வந்தா தானே உடைப்பீங்க...’ வாடகை குதிரையில் வந்து ரிவ்யூ சொன்ன கூல் சுரேஷ்!
சென்னை ரோகிணி திரையரங்கில் பொன்னியின் செல்வன் படம் பார்க்க கூல் சுரேஷ் குதிரையில் வந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், படம் சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், தான் வந்த குதிரை பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் பயன்படுத்திய குதிரை என்றும் அந்த குதிரை வாடகைக்காக செயினை அடமானம் வைத்தாகவும் தெரிவித்துள்ளார்.
’படம் எப்படி இருக்கு..’ ரசிகர்களிடம் ரிவியூ கேட்ட நடிகர் விக்ரம்!
சென்னை திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து பொன்னியின் செல்வன் முதல் காட்சியை பார்த்துவிட்டு வெளியே வந்த நடிகர் விக்ரமிடனும் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது ரசிகர்களிடம் படம் பார்த்தீர்களா, எப்படி இருந்தது என ரிவியூ கேட்டார். அதற்கு சூப்பராக இருப்பதாக அங்கிருந்தவர்கள் பதிலளித்தனர்.
ரசிகர்களோடு சேர்ந்து பார்த்தது பெரும் மகிழ்ச்சி : ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து பொன்னியின் செல்வன் முதல் காட்சியை பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசுகையில், இரண்டு வருடங்களுக்கு பிறகு என்னுடைய படம் திரையில் வெளியாகியுள்ளது. ரசிகர்களோடு சேர்ந்து பார்த்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’ என்றார்.
படத்தை சோழ தேசத்தில் பார்ப்பது மகிழ்ச்சி : நடிகர் பார்த்திபன்!
பொன்னியின் செல்வன் திரைப்படம் தஞ்சை சாந்தி திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் பார்த்திபன் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து வருகிறார். முன்னதாக, ’படத்தை சோழ தேசத்தில் பார்ப்பது மகிழ்ச்சி’ என மகிழ்ச்சி தெரிவித்தார்.
.