100 பேரன், பேத்திகளுடன் 100-வது பிறந்த நாளை கொண்டாடிய பொன்னம்மாள் பாட்டி

100-வது பிறந்த நாளை கொண்டாடிய பொன்னம்மாள் பாட்டி

காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அருகே 100 வயது மூதாட்டி 100 பேரன், பேத்திகளுடன் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

 • Share this:
  காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே உள்ள ஆனம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னம்மாள். இவரது கணவர் ராகவன் விவசாய வேலை செய்து வந்தவர். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் காலமானார். இவரது மறைவிற்கு பிறகு இவரது மனைவியான பொன்னம்மாள் இயற்கை வைத்தியம் செய்து வந்தார்.

  சின்ன சின்ன உடல்நலக்குறைபாடுகளுக்கு இவர் சொல்லும் இயற்கை வைத்தியம் இந்த ஊரில் பிரபலம்.இந்நிலையில் தற்போது பொன்னம்மாள் பாட்டிக்கு 100 வயது முடிந்த நிலையில் அவரது பிறந்த நாளை ஆனம்பாக்கம் மக்கள் கொண்டாடியுள்ளனர்.

  தங்கள் ஊரின் அனுபவ மருத்துவராய் விளங்கும் பொன்னம்மாள் பாட்டியின் 100-வது பிறந்த நாளை, போஸ்டர், பேனர், பலூன், பந்தல் என ஊர் திருவிழா போல கொண்டாடி உள்ளனர் ஆனம்பாக்கம் மக்கள்.

  கேக் வெட்டி, 100 பேரன், பேத்திகளுடன் நடனமாடி, உற்சாகமாய் 100-வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார் பொன்னம்மாள் பாட்டி.
  Published by:Sankaravadivoo G
  First published: